Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாட்டில் யாப்பு திருத்தம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு 29ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.00மணிக்கு தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பேராளர் மாநாடு இரண்டு அமர்வுகளாக நடைபெறும். முதலாவது அமர்வில் புதிய உத்தியோகத்தர்கள் அறிமுகம் செய்துவிக்கப்படுவதோடு, செயலாளர் நாயகத்தினதும், பொருளாளரினதும் அறிக்கைகள் வாசிக்கப்படும்.கட்சியின் தவிசாளரின் உரையும் இடம் பெறும். யாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதோடு, செயற் குழுவிற்கான தெரிவும் இடம் பெறும்.

இரண்டாவது அமர்வில் புதிய உச்ச பீட உறுப்பினர்கள் பற்றி அறிவிக்கப்படும். தேசிய தலைவர் பிரதான உரையாற்றுவார். நாடெங்கிலும் இருந்து கட்சியின் ஏராளமான  பேராளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.

முன்னதாக 28ஆம் வெள்ளிக்கிழமை கட்சியின் கட்டாய உச்ச பீட கூட்டம் தாருஸ் சலாம் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடக்தக்கது. 

No comments

Powered by Blogger.