Header Ads



காத்தான்குடியில் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பி வழங்கும் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நாங்கள் ஒன்றிணைந்து வாழும் அழகிய இலங்கைத்தீவு எனது தாய்நாடு எனும் தொனியில் கீழ் செயற்படும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணம் தழுவிய 8000 வறிய மாணவர்களுக்கு 2012ம் ஆண்டிக்கான இலவச பாடசாலை அப்பியாசக்கொப்பி விநியோக நிகழ்வின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் சூறா சபை அமீர் மௌலவி எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

அஸ்ஹர் நளீமியின் கிறாஅத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானதுடன் இஸ்லாமிய மதம் சார்பாக எம்.எஸ்.எம்.அலியார் பலாஹியும்'இந்து மதம் சார்பாக  சிவசிறி சிவபாலன் ஐயாவும் கிறிஸ்தவ மதம் சார்பாக பாஸ்டர்எஸ்.புவனேந்திரன் ஆகிய சமயங்களின் தலைவர்களினால் ஆசியுரை வழங்கப்பட்டது.

இதன் போது தமிழ்-முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு ந.ம.இ. சூறா சபை உறுப்பினரும்'முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் மற்றும் ந.ம.இ. சூறா சபை உறுப்பினர்களான ஹாறுன்' 'பொறியியலாளர் பழுலுல் ஹக் 'ஆசிரியர் லாபிர் 'ந.ம.இ.காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சபீல் நளீமி மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் சமையத் தலைவர்கள் ஆகியோரினால் இலவச பாடசாலை அப்பியாசக்கொப்பிகள்  விநியோகிக்கப்பட்டன.

இங்கு ந.ம.இ. சூறா சபை உறுப்பினரும்'முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மானின் விஸேட உரையும்' ந.ம.இ. சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் பழுலுல் ஹக்கின் சிறப்புரையும் இடம்பெற்றது.

குறித்த  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக பல்வேறு கல்வி  சமூக அபிவிருத்தி அரசியல் வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.