Header Ads



பன்றி இறைச்சியும், பாராளுமன்றமும்

(SAFRAN SALEEM)

இலங்கை திருநாட்டில் சட்டமியற்றும் அதி உயர் அதிகாரம் கொண்ட நிறுவனம் பாராளுமன்றம் ஆகும். எந்தவொரு சட்டமும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பெறும்பான்மை ஆதரவு இருப்பின் சட்டம் அங்கிகரிக்கப்படும். எமது பாராளுமன்றத்தில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எப்பாகுபாடுமின்றி உறுப்பினர்கள் தெரிவாகின்றனர். இதன் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் சபாநாயகர் பதவியில் எமது முன்னோர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். (பாக்கிர் மாக்கார், M.H. மொஹமட்) 

பாராளுமன்றம் போலவே எமது நாட்டின் சகல அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் முஸ்லிம்கள் ஏனைய மதத்தினருடன் இரண்டரக்கலந்து கடமை புரிகின்றனர்/கற்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாமிய வரையறையினுல் செயற்பட்டும் தமது கலாச்சாரத்தை பேணியும் வரலாறு நெடுகிலும் வந்துள்ளமையை வரலாறே சான்று பகர்கின்றது.

ஆனால் ஓரிரு வாரங்களுக்கு முன் பாராளுமன்றம் உறுப்பினர்கள் இருவர் பாராளுமன்ற சமயலறையில் பன்றி இறைச்சி சமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் பின் முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்களும், சில ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அதனை எதிர்த்து சபாநாயகருக்கு விண்ணப்பித்தனர். ஆனால் ஒரிரு முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்கள் மட்டுமே ஊடக அறிக்கை வெளியிட்டனர். அதன் பின்னர் சபாநாயகர் பன்றி இறைச்சி சமைக்கும் பிரேரனையை நிராகரித்தார். ஆனால் சாப்பாட்டு முறையில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பன்றி இறைச்சி கலக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் நிலவுகின்றது. இது குறித்து சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இது குறித்து முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்கள் காத்திரமான நடவடிக்கைகள் எடுத்துள்ளார்களா…….?  

இச் சந்தர்ப்பத்தில் எம் மத்தியில் சில கேள்விகள் உதிக்கின்றது..............................!

இவ்வளவு காலமாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டு முறையில் ஏன் இந்த திடீர் மாற்றம் ? 

திடீரென பன்றி இறைச்சி கோரப்படுவதன் நோக்கம் என்ன….? 

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சதிகளில் இதுவும் ஒன்றா….? 

முஸ்லிம்களுக்கு பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது என அப் பாராளுமன்றம் உறுப்பினர்கள்  அறியாதவர்களா ?  

ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் கடமை புரிகின்ற/கற்கின்ற முஸ்லிம்களது கதி என்ன ? 

ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் பன்றி இறைச்சி வினியோகிக்கப்படாது என உத்தரவாதமளிக்க முடியுமா ? 

பாராளுமன்றத்திலே பன்றி இறைச்சி வினியோகிக்கப்பட்டு விட்டால் ஏனைய அரச நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் இன்னும் இதர நிறுவனங்களில் பன்றி இறைச்சி வினியோகிக்கப்படாது என கூற முடியாது. அண்மையில் குண்டசாலை விவசாயக்கல்லூரியில் பன்றி இறைச்சி வினியோகிக்கப் பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது இத்துடன் முடியும் என கூற முடியாது. 

பன்றி ஹராமாக்கப்பட்ட உணவு என்பது ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்ததேயாகும். “ஹராத்தை உண்டு வளர்ந்த உடல் அனைத்தும் நரகத்துக்கே தகுதியானது (அல் ஹதீஸ்)”. 

இச்சந்தர்ப்பத்தில் எமது பொறுப்பு என்ன ?

இப் பிரச்சினை பாராளுமன்றத்தில் தானே என நம்மால் இருக்க முடியாது. பாராளுமன்றத்திலே இந் நிலமை என்றால் நாளை எமது காரியங்களில் , திணைக்களங்களில், பல்கலைகழகங்களில், கல்லூரிகளில், பாடசாலைகளில், வைத்தியசாலைகளில், நீதிமன்றங்களில் இப் பிரச்சினை வர மாட்டாது என கூற முடியாது. ஆகவே இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமுள்ள பிரச்சினையல்ல. மாறாக முழு இலங்கை முஸ்லிம்களினதும் பிரச்சினையாகும். இதனை முளையிலே கிள்ளியெறிய வேண்டியது இலங்கை முஸ்லிம்களினது குறிப்பாக அரசியல் தலைமைகளினது அவசர பொறுப்பாகும். இது விடயத்தில் ஜம்மியத்துல் உலமா உடணடியாக கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

யா அல்லாஹ்…                                                                                                                              எமது உடலினுல்  எம்மை அறிந்தோ அறியாமலோ ஹராமான உணவு உட்புகு வதைவிட்டும் எங்களை பாதுகாப்பாயாக.




     



2 comments:

  1. salaam my dear brothers what is the definition for Muslim????? also if you tell definition can you say who is that Muslim man in parliament???

    ReplyDelete
  2. awarhaludaiya-samuthayaththin alivin aarampam aarampamahinrathu.therium thane nattil ithatku mun nadantha sampavangal.
    awarhalukku payam.engea nangal awarhalai ella wahailum munnery widuwoom enru...............................

    ReplyDelete

Powered by Blogger.