மன்னாரில் அவசர நிலை பிரகடனம் - போக்குவரத்து துண்டிப்பு - விடுமுறைகள் ரத்து
(Tm) மன்னார் மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான அனைத்து போக்குவரத்துக்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவருவதுடன், அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்க உத்தியோகர்களின் விடுமுறைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்து படகுகள் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Post a Comment