முஸ்லிம் காங்கிரஸின் பலமும், பேராளர் மாநாடும்..!
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இன்று பலர் விமர்சனம் செய்கின்றனர். தனி மனிதனாய் பழியை ஏற்றுக்கொள்ள நிர்பந்திப்பது தவறாகும்.எதை வேண்டுமானாலும் பேசலாம். எதை வேண்டுமானாலும் எழுதாலாம். ஆனால் அதில் நியாயமும் இருக்கவேண்டும். மு.கா விற்கும் எனக்கும் உறவும் இல்லை பகையும் இல்லை.அரசியல் அரங்கிற்கு அப்பால் நின்று பேசுகின்றேன். மு கா ஒரு சமநிலையான தூணின்மேல் நிறுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. பொதுவான கொள்கை ஒன்றிற்கு அப்பால் சில முரண்பாடுகள் தோன்றியிருக்கிறது.
இதன் வெளிப்படைத்தன்மை மறைக்கமுடியாதது. தலைமைத்துவம் பல நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருகின்றது.அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்க வேண்டும் என்பது மு.கா தலைவரின் தனிப்பட்ட விருப்பம் என்று உறுதியாக கூறமுடியாது.கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இரு முக்கியஸ்தர்களின் நடவடிக்கையும் இதனை உறுதிப்படுத்துகிறது. கட்சியை தலைமைத்துவம் தவறாக பயன்படுத்துகின்றது என்றால் அது பகிரங்கமாக விவாததிற்கு வந்திருக்கும். ஆனால் இங்கு தலைமைத்துவத்தை பிழையாக வழி நடத்தும் அழுத்தங்களும் இடம் பெறுகிறது. எந்த தனி நபர் பெயரையும் களங்கப்படுத்த விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் நிமிர்ந்து நின்று பேசுவதற்கு உருவாக்கப்பட்டது. இன்று வளைந்துகொடுக்கும் நிலைமை உருவாக்கி இருப்பது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை ஆணி வேரறுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
யுத்தத்திற்கு பிறகு முஸ்லிம் சமூகம் குடிபரம்பல், நிலப்புல எல்லை, மத சுதந்திரம்,மற்றும் பௌதீகரீதியான,உளவியல் ரீதியான வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது.இது பிரதேச அபிவிருத்திக்கு அப்பால் மிக முக்கியமானது. வெறும் அபிவிருத்தி என்ற மாயக்கண்ணாடியை காண்பித்து சமூகத்தின் எதிர்காலம் பற்றிய திட்டமிடலை புறக்கணிப்பது ஆபத்தானது. முஸ்லிம்களின் அரசியல் சரியான இடத்தை நோக்கி நகர்தப்படவேண்டும்.
முஸ்லிம்களுக்குள்ளே பல தலைவர்கள் இருந்தாலும் சர்வதேச அரங்கில் குரல் கொடுக்க கூடிய பலம் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருக்கிறது. அதன் அடையாளத்தை சிதைப்பது வரலாறில் எழுதப்பட வேண்டிய துரோகமாகும்.
இதே சமயம் மு.கா .வின் தலைமைத்துவத்தின் இடைவெளியை நிரப்பும் அளவுக்கு ஆளுமை உள்ளவர் தென்படவும் இல்லை. மு.கா.ஆதரவாளர்கள் உண்மைத்தன்மையை விளங்கி கொண்டு முரண்பாடு தோன்றும் இடத்தை சந்ததிகளுக்காக பொது நலத்துடன் சரிசெய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை மு.கா.தான் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதுவே முஸ்லிம்களின் குரல் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டமையை சுட்டிக்காட்டுகிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மு.கா வை பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.தலைமைத்துவம் பிழையாக நடக்கிறதா?பிழையாக வழி நடத்தப்படுகிறதா? என்ற உண்மையை மக்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸின் போராளர் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் இந்த உண்மைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
சரியான நேரத்தில் சரியாக சொல்லி இருக்கிறிர்கள்.
ReplyDeleteபுரியும் படி சொல்லி இருக்கிறிகள்.புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.
ReplyDeleteWonderful message.. start to rebuild SLMC. Our Duas & support will be there..
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் ,முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்பட வேண்டும்.தலைமைத்துவம் மதிக்கப்பட வேண்டும்
ReplyDeleteநல்லது.
ReplyDeleteமுஸ்லிம் எனும் சொல்லை தன்னுடன் சேர்த்துக்கொண்ட இந்த கட்சி, தனது சொல் , செயல் அங்கீகாரம் அனைத்திலும் முஸ்லிமியத்தை வெளிக்கொணரவேண்டும். அப்போதுதான் இஸ்லாமிய சமுகம் தலை நிமிர்ந்து வாழமுடியும். வேருமுனே முஸ்லிம் எனும் சொல்லை தனது கட்சியின் பெயருடன் இணைத்துக்கொண்டு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கேவலப்படுத்துகின்றமுரையில் அரசியல் செய்வது இஸ்லாத்தின் பெயரால் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இந்த விடயத்தில் கட்சி பூரணமான முறையில் எல்லா விடஎங்களிலும் புனரமைப்பு செய்யப்படவேண்டும்.
அல்லது மற்ற கட்சிகள் போல் கட்சியின் பெயரில் இருந்து முஸ்லிம் எனும் சொல்லை நீக்கிவிடவேண்டும். இவ்வாறு செய்கின்றபோது ஒருவகையில் கட்சி செய்கின்ற தவறுகளுக்கு முஸ்லிம்களும் ,இஸ்லாமும் வஞ்ச்சிக்க படவேண்டி இராது.அனால் முஸ்லிம்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும்.இஸ்லாத்தைப்பறி அரசியல் அரங்கில் வெளிக்கொணர்வதற்கு ஒரு அடையாளம் நம்மிடையே இல்லாது போவிடும்.
எனவே இருக்கின்ற கட்சியை இஸ்லாமிய ரீதியில் புனரமைப்பு செய்ய எல்லோரும் விட்டுக்கொடுப்புடன், நல்லமனதுடன் செயல்பட முன்வர வேண்டும். பணத்திகும், பதவிக்கும் முட்டுக்கொடுக்கின்ர நிலையை கட்சி கைவிடவேண்டும். பணம் சம்பாதிக்கும் ஒரு களமஆக கட்சியை உருவாக்க கூடாது. அந்தவகையில் அதி உயர்பீடமும், தலைமைத்துவமும் மாற்றப்படவேண்டும். பணம்,மது மற்றும் காடைத்தனம் என்பன தேர்தல்கால முதலீடுகள் எனும் நிலை மாற்றப்படவேண்டும். அல்லாஹ்,ரசூலுக்காக மக்கள் வாக்களிக்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும். இவை யப்பக்கப்படவேண்டும்.
இவ்வாறு நல்ல மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸ ஆக புதிய ஆண்டில் இருந்து திகழவேண்டும்.
அப்போதுதான் முதுகெலும்புள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் படையை உருவாக்கமுடியும். இறைவன் நாடினால் இதன் மூலம் பல வெற்றிகளை அடையலாம்.
இவ்வண்ணம்,
நன்றியுடன்
Alithambi Rassaam