Header Ads



சிரியா கிளர்ச்சியாளர்கள் முன்னேறுகின்றனர்...!


சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக கடந்த 21 மாதமாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தலைநகர் டமாஸ்கசில் அடிக்கடி குண்டு வெடிப்புகள் நிகழ்கின்றன. கடந்த 12-ந்தேதி நடந்த குண்டு வெடிப்பில் பலர் இறந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இதில் உள்துறை மந்திரி முகமது அல்-ஷார் காயமின்றி தப்பியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த குண்டு வெடிப்பில் அவர் காயம் அடைந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் நேற்று லெபனானிலுள்ள பெய்ரூட் நகருக்கு சென்றார். இதை லெபனான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதற்கிடையில் டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளருக்கும் இடையே கடுமையான சண்டை நீடிக்கிறது. அங்கு ஹாமா மாகாணத்தில் 6 நகரங்களை பிடித்து விட்டதாக நேற்று கிளர்ச்சிப்படை உறுப்பினர் காசிம் தெரிவித்தார். விரைவில் மேலும் சில நகரங்கள் எங்களுடைய வசம் வந்துவிடும் என்றும் அவர் கூறினார். 

இதற்கிடையில் அலிப்போ நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 21 பேர் இறந்தனர். 

No comments

Powered by Blogger.