முசலி – வெளிமலை மீள்குடியேற்ற கிராமத்திற்கான குடிநீர் விநியோகம்
(எஸ். எச். எம். வாஜித்)
1990ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக முசலி பிரதேசத்தின் பண்டாரவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட வெளிமலை கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்; 2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானத்தின் பின்னர் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மீள்குடியேற்றப்பட்டனர். இதன்காரணமாக அவர்கள் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இவ்வடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தருமாறு வன்னி மாவட்ட கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் அல்ஹாஜ் றிஷத் பதியுதீன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் பயனாக அரச சார்பற்ற நிறுவனத்தின் உதவியோடு ரூபா. 800,000 பெறுமதியான குடிநீர் விநியோகத்திட்டம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இவ் குடிநீர் விநியோகத்திட்டத்தினை கைத்தொழில் மற்றும் வாணி;ப அமைச்சர் அல்ஹாஜ் றிஷத் பதியுதீன் பணிப்புரையின் பேரில் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் அல்ஹாஜ் அலிகான் ஷரிப் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்காக இவ்பிரதேச மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
Post a Comment