Header Ads



வடிகான்களினால் உண்டான பாரிய வெள்ளம் - உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரல்


(எம்.பைஷல் இஸ்மாயில்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வடிகான்களில் குப்பைகளும், மணலும் நிறைந்து காணப்படுவதால் வெள்ளம் வடிந்தோடுவதில் தடையேற்பட்டு காணப்படுகின்றது. என சுட்டிக் காட்டி பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கல்முனை. அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு தொடக்கம் பத்தாம் பிரிவு வரையிலான பிரதான வீதியின் அருகில் அமைக்கப்பட்ட பிரதான வடிகான்களிலேயே இவ்வாறான குப்பைகளும், மணலும் நிறைந்து காணப்படுகின்றது. 

அது மாத்திரமல்லாமல் சில பிரதான வடிகான்களில் மணல் நிரம்பி அதில் மரம் வளர்ந்து காய்த்து பழுக்கும் நிலைமையில் இருந்தும், அந்த வடிகானை இன்னமும் துப்பரவு செய்யமால் இருக்கும்  நிலைமை பல மதங்களாக யாருமே கவனிப்பாரற்று இருப்பதை என்னவென்று சொல்வது.

இவ்வாறான நிலைமையில் காணப்படுகின்ற பிரதான வடிகான்களினூடாக எவ்வாறு வெள்ள நீர் ஓட முடியும்? அது மாத்திரமல்லாமல் மணல் மற்றும் குப்பைகளினால் நிரம்பியிருக்கின்ற வடிகான்களினால் வெள்ளம் வடிந்தோட முடியாமல் ஊருக்குள் அமைக்கப்பட்டுள்ள சிறு சிறு வடிகான்கள் ஊடாக வருகின்ற வெள்ள நீர் செல்ல வழியின்றி வீதியோரங்களில் யாருமே கவனிப்பாரற்று காணப்படுகின்ற வளவுகளில் நீர் தேங்கி நிற்கின்றன.

இவ்வளவுகளும் குறிப்பிட்ட பரப்பளவு வெள்ள நீரைத்தான் தக்க வைத்துக்கொள்ளும். இந்த வளவுகளையும் மிஞ்சி வளவைச் சூழவுள்ள குடியிருப்பு நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

குறிப்பிட்ட வளவை சுற்றியுள்ள மக்களினால் கடந்த கால வெள்ள அனர்த்தத்தின்போது கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதில் பிரதேச மக்களின் கையொப்பமிட்டு அக்கடிதத்தை அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊடாக புகார் தெரிவிக்கப்படடிருப்பதாகவும் பொதுமக்கள் எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அந்த முறைப்பாட்டுக் கடிதத்திற்கும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் குறிப்பாக கடந்த நான்கு தினங்களுக்கு முன் ஒரு இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வந்த கனத்த மழையால் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த மழையினால் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகாத பல இடங்களும்; வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதற்கு மற்றுமோர் காரணம் ஊருக்குள் அமைக்கப்பட்ட வடிகான்களுக்கு மூடிகள் போடுபடாமல் பல மாதங்களாக காட்சியளிக்கின்றது. 

இவ்விடயத்தை பற்றி பல தடவைகள் குறிப்பிட்ட ஒப்பந்தக் காரர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டடும் அவர்கள் மூடிகளைப் போடுவதாகக் கூறி காலங்களைக் கடத்தி மிக அலட்சியமாக இருந்து விடுகின்றனர். 

இவ்வாறு அமைக்கப்பட்ட வடிகான்களுக்கு மூடிகளைப் போடாமல் ஒப்பந்தக்காரர்கள் பல மாதங்களாக இருந்ததினால் குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காக தங்களுடைய வாகனங்களை வெளியே எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதினால் மூடி இல்லாமல் அமையப்பெற்ற வடிகானுக்குள் மண் போட்டு மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் உள்ள எல்லா நபர்களும் வடிகானை மூடிவிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய மழையினால் உண்டான வெள்ளத்தில் மேற்குறிப்பிட்ட (மூடிய நிலைமையில் இருந்த வடிகான்களினால்) வெள்ளம் வடிந்தோடுவதில் தடையேற்பட்டது.

இதற்கு காரணமாக இருந்த ஒப்பந்தக்காரர்களுக்கு தக்க நடவடிக்கையை எடுக்க அவை தொடர்பான அதிகாரிகள் காலம் தாழ்த்ததாது உடனடியாக செயற்பட முன்வரவேண்டும்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைக் காரியாலய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வடிகான்களில் குப்பைகளும், மணலும் நிறைந்து காணப்படுவதால் வெள்ளம் வடிந்தோடுவதில் மிகப் பாரிய தடையேற்பட்டுள்ளது.  


இவ்விடயம் தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாக அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். என இவ்வாறு சுட்டிக்காட்டி 2012.12.25 ஆம் திகதி இன்று அனுப்பி வைக்கட்ட  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான கடிதத்தின் பிரதிகள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கும், அட்டாளைச்சேனை    பிரதேச செயலாக செயலாளருக்கும் அனுப்பிக்கப்பட்டுள்ளன.

            

No comments

Powered by Blogger.