டோனி கிரேக் நுரையீரல் புற்று நோயினால் மரணம்..!
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டனும், புகழ் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருமான டோனி கிரீக் நுரையீரல் புற்று நோய் காரணமாக இன்று 29-12-2012 காலமானார். அவருக்கு வயது 66.
டோனி கிரீக் தனது கணீர் குரலின் மூலம் ஒரு கிரிக்கெட் ரசிகர் பட்டாளத்தையே தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் இறுதியாக நடந்து முடிந்த இருபதுக்கு இருபது உலகக் கோப்பை தொடரிலும் தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் போதுதான் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு நாடு திரும்பிய கிரீக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் நோயின் தன்மை மற்றும் வயதின் மூப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார்.
டோனி கிரீக் இங்கிலாந்து அணிக்காக 58 போட்டிகளில் விளையாடி 3599 ரன்களையும் (சராசரி 40.43), பந்து வீச்சில் 141 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
Post a Comment