ரோஹிங்கியா முஸ்லிம்கள் நிலைமை கவலைக்கிடம் - ஐ.நா. வேதனை
(tn) இனக்கலவரம் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மியன்மார் ரொஹிங்கியா முஸ்லிம்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவர்களை பார்வையிடச் சென்ற ஐ. நா. மனிதாபிமான உதவிகளு க்கான தலைவர் வலரி அமொஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவர் களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மியன்மாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இன முரண்பாடு காரணமாக 135,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து தற்காலிகமாக முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ரொஹிங்கியா முஸ்லிம்களாவர். இவ்வாறு தற்காலிக முகாம்களில் இருப்போரில் ரகினெ பெளத்தர்களை விடவும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மோசமான நிலையில் இருப்பதாக அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் கூறியுள்ளார். மெய்பொன் தீபகற்பத்தில் இருக்கும் ரகினெ இனத்தவரின் முகாம்கள் நேர்த்தியாக அமைக்கப்பட் டிருப்பதோடு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன என அந்தச் செய்தியாளர் கூறியுள்ளார். ஆனால் எரிக்கப்பட்ட வீடுகளைத் தாண்டி நெடுந்தூரம் சென்ற பின் சேறும் சகதியும் உள்ள பகுதியில் சுமார் 4000 ரொஹிங்கியா முஸ்லிம்க ளின் தற்காலிக முகாம் அமைந்துள்ளன என்றும் பி.பி.சி. செய்தியாளர் மேலும் கூறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஐ. நா. சிரேஷ்ட அதிகாரி அமொஸ் கூறும் போது: இது கவலைக்கிடமான நிலையாகும். இதற்காக நாம் ஏதாவது செய்ய வேண்டும். துரதிருஷ்டவசமாக மக்களுக்கு நாம் உண்மையில் செய்ய வேண்டும் என்று கருத்தை ஐக்கிய நாடுகள் சபை என்ற வகையில் முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. இந்த சூழல் பயங்கரமாக உள்ளது” என்றார். அரசு நிர்வாகத்தின் நெருக் கடிகள், வீசா பிரச்சினைகள், அதேபோன்று குறைவான நிதியுதவிகளால் ஐ.நா. செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை நீடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Post a Comment