இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வறிய மாணவர்களுக்கு உதவி (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதினையும் வறிய மாணவர்களின் கல்வியை ஒளிமயமாக்குவதையும் நோக்காகக் கொண்டு கொலன்னாவ ஜூம்ஆ பள்ளி நிருவாகம் மற்றும் அப்பிரதேச முஸ்லிம்கள் ஆகியோர்களின் அனுசரணையில் இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) கொலன்னாவை உமகிளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளிவாசலின் தலைவர் ஐ.வை.எம்.ஹனீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சகல சமூகத்தையும் சேர்ந்த சுமார் ஆயிரம்(1000) வறிய பாடசாலை மாணவர்களுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டன. நிருவாக சபை உறுப்பினர்களான ஏ.இஸட்.பெரோஸ் மொஹம்மட், எம்.எப்.இலாம் ஆகியோர்களின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கொலன்னாவ புரானாம விகாரையின் விகாராதிபதி தலங்கம சுமங்கல தேரர், கொலன்னாவ சென் அந்தனிஸ் தேவாலைய அருட் தந்தை ஜூட் கிரிசாந்த, கொலன்னாவ நகர முதல்வர் ரவீந்திர உதயசாந்த, மௌலவி கலீல் றஹ்மான், கொலன்னாவ எதிர்கட்சித் தலைவர் ஹெத்தல புத்தில சில்வா, வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பாலித உட்பட பல புத்திஜீவிகள், ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment