அமெரிக்காவில் மாணவர்கள் கொல்லப்படவிருந்த மற்றுமொரு சம்பவம் தடுக்கப்பட்டது
அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் இளைஞர் ஒருவர் 20 குழந்தைகள் உள்பட 26 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதே நாளில் மற்றொரு துப்பாக்கி தாக்குதல் சம்பவத்தை போலீஸார் முறியடித்து உள்ளது தெரியவந்துள்ளது.
சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தன்வசப்படுத்தி, உடற்பயிற்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளப் போவதாக, ஓக்லஹாமா மாகாணம் பார்ட்லேஸ்வில்லியில் உள்ள உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சம்மி ஈகிள்பேர் சாவேஸ் (18) தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து சாவேஸ் என்ற இளைஞரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment