Header Ads



மன்னார் முஸ்லிம்கள் பரிதவிப்பு - அவசர நிவாரண உதவிக்கு கோரிக்கை


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)                


மன்னாரில்  தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக மாவட்டத்தில் பல ஆயிரம் பேர்  இடம்பெயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரேன்லி டிமெல் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஏற்பட்டுவரும் அவசர நிலமைகளின்போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை செய்வதற்கான அவசர முன் ஏற்பாட்டுக் கூட்டம் ஒன்று மன்னார் கச்சேரியில்  மணிக்கு இடம்பெற்றது.   

மன்னாருக்கான ஒரேயொரு மார்க்கமாக தற்போது பரப்பக்கடந்தான பாதை காணப்படுவதாகவும் நாளை அப்பாதையூடாக மன்னாருக்கான உணவுப் பொருட்களை கொண்டவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் 17.5 அடிவரை உயர்ந்தள்ளதாகவும் இதன் மூலம் வெளியேறும் நீரின்வேகமாக இருப்பதாகவும் இதன் கீழ் 15 குளங்கள் உடைப்பெடுக்கும் ஒரு நிலை காணப்படுவதாகவும் இந்தவகையில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொள்வதுடன் மன்னாரில் சகல பிரதேசச் செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் இதனோடு தொடர்புடைய அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகளை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவசர நிலைமைகளுக்கு பயன்படுத்த சுமார் 30 பேரூந்துகள் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் மேலதிக அரச அதிபர்  திருமதி நந்தினி ஸ்ரேன்லி டிமெல் தெரிவித்தார்.

இதேவேளை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல குக்கிராமங்கள் நீரில் மூழ்சியிருப்பதாகவும் இதன் காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் இவர்களுக்கான அவசர உதவிகளை உடன் மேற்கொள்ளுமாறு முசலி பிரதேச சபை உறுப்பினர் ஜெசீல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோல் விடுக்கின்றார். 

இதேவேளை சிலாவத்துறையில் உள்ள கரடிக்குளி கிராமம் வெள்ளத்தினால் எந்தவித தொடர்புகளுமின்றி பிரிக்கப்பட்டுள்ளதாகவும் மீள் குடியேறிய சுமார் 256 குடும்பங்கள்  உணவு உள்ளிட்ட வசதிகளின்றி காணப்படுவதாகவும் இன்று மாலை (27) வரை எந்தவித உதவிகளும் தமக்கு கிடைக்கவில்லையென்றும் தெரித்துள்ளதாகவும் இவர்களுக்கான பல இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை புத்தளம் றஹ்மத் நகர் மக்கள் இணைந்து சேகரித்துள்ளதாகவும் அவற்றை நாளை அங்கிருந்து கரைத்தீவு கடல்வழியாக படகுகள் மூலம் கரடிக்குளிக்கு கொண்டு செல்வதற்கான அவசர ஏற்பாடுகளை தாம் செய்து வருவதாகவும்  சி.ரி.எம்.தௌபீக் ஆசிரியர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.