அமெரிக்காவில் மலை பாம்புகளை பிடிக்கும் போட்டி
அமெரிக்காவில் புளோரிடா மகாண காடுகளில் பர்மீய வகை மலைப்பாம்புகள் அதிகளவில் இருக்கின்றன. இவை அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி சுற்றுச்சூழலை பெரிதளவில் பாதித்து வருகின்றன. இதன் எண்ணிக்கை குறைக்க புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதற்காக பர்மீயவகை மலைப்பாம்புகளை (பைத்தான்) பிடிக்க ஜனவரி மாதத்தில் ஒரு போட்டி ஒன்றை அது அறிவித்துள்ளது. இதில் அதிகம் பாம்புகளை கொல்லுபவர்களுக்கு 1500 டாலர் பரிசும், நீளமான பாம்பை பிடிப்பவருக்கு 1000 டாலர் பரிசும் அளிக்கப்படும் என்று அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைப்பாம்புகளை ரோட்டில் கொல்வது அனுமதிக்கப்படமாட்டாது என்று அது அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் 25 டாலர் பதிவு கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
Post a Comment