இஸ்லாமிய தலைமைகள் விழித்து கொண்டுதான் தூங்குகிறது..!
மனித இனம் நேசிக்கின்ற உலகம் அழிந்து விடப்போகிறது. மனிதன் வயதுகடந்து நோயுற்று தளர்ந்து போவதுபோல் பூமி பந்து தளர்த்தி விடப்பட்டுள்ளது.
மனித இனத்தின் அறுவடைக்காலம் தொடங்கிவிட்டது. நல்லவர்களும் படுகொலை செய்யப்படுவார்கள் கெட்டவர்களும் படுகொலை செய்யப்படுவார்கள். பல மசூதிகள் உடைக்கப்பட்டது. பல மசூதிகள் உடைக்கபடுகிறது .பலமசூதிகள் உடைக்கப்படும். பனிமலையும் எரிமலையும் உருகி சிலதேசம் புதைந்து விடலாம்.அமைதி எப்போது என்று தெரியாது ஆயினும் விசுவாசிகளுக்கு ஒதுங்கி கொள்ள நேரம் இல்லை சத்தியத்தை நிலைநாட்டும் போரை தொடர வேண்டும். சிலர் இஸ்லாதின் உள்ளே வருகின்றனர்.சிலர் வெளியே போகின்றனர்.
பல பாதைகள் திறக்கப்பட்டுள்ளது சிலரின் பாதையில் உலகம் பேரின்பமாய் விரிந்து கிடக்கிறது .இருதயம் நாகரீகத்தின் கோரத்தாண்டவத்தில் மரக்கட்டையாய் அள்ளுண்டு போகிறது. சிலருக்கு வழங்கும் உபதேசம் எல்லாம் ஓட்டை விழுந்த பாத்திரத்தில் நீர் நிரப்புவது போலதான். சிலசமயங்களில் மூடிய பாத்திரத்தில் நீர்நிறைப்பது போலதான். புறத் தோற்றத்தில் அலங்கரிக்கும் தாமரை தடாகமாய் மாறிவிடுகின்றார்கள். அது ஒரு நீர் வாழ் தாவரம் ஆயினும் அதன் இலையின் உட்புறம் நீரில் ஒட்டாமல் இருப்பதுவாய் பலரின் இருதயம் ஈமானில் பினைக்கபடவில்லை.பரம்பரை இஸ்லாம் அவ்வளவுதான்.
ஸியோனிஸ ,உலக மயமாக்கல் அதிகமானவர்களை உந்தி தள்ளி நரகத்தின் எல்லைக்கு நகர்த்துகிறது.உண்மையில் அதிகமானவர்கள் இரண்டாம் நிலை வியாபாரி முதலாளி அல்ல.அறிவியல் துறைக்கு மூலதனம் இடாததால் இஸ்லாமிய தேசத்தின் மண்டைக்குள் யூதனின் மூளை நுழைந்தது. ராஜதந்திர உறவு என்றபெயரில் இஸ்லாமிய ராஜ்யம் வெட்டிப் பிளக்கப்படுகிறது.
பல இஸ்லாமிய தலைமைகள் விழிதுத்து கொண்டுதான் தூங்குகிறது. எப்படி தட்டியெழுப்ப முடியும். சிலரின் இருதயத்தை பற்று எனும் புற்று நோய் தாக்கிவிட்டது. சியோனிஸ போதைக்குள் மூழ்கிய முஸ்லிம் தலைமைகள் மூச்சு திணறியது. இன்னும் காத்துக்கிடக்கிறது.
வேகமாக கலவரத்துடன் நகருகின்ற காலம் சொல்லுகின்ற சேதி உலகம் தன் இறுதி பயணத்தை தொடருகின்றது என்பதுதான்.
இறவனின் படைப்புக்கள் புறப்பட்டுவிட்டது. விஞ்ஞானம் இனி தடுமாறி தலைகுனியப்போகிறது. வானத்திற்கும் பூமிக்கும் இடையில் பல விசித்திரங்கள் காத்துக்கிடக்கிறது. அவற்றுக்கு பெயரிடும் பட்டியலை விஞ்ஞானம் தொடங்கி இருக்கிறது
இஸ்லாமிய உலகம் தலைமைத்துவ மாற்றத்தை கோரி நிற்கின்றது. தனிப்படவர்களின் மாற்றங்கள்தான் தலைமைதுவமாற்றம்.
அதிகமான முஸ்லீம்கள் சத்தியத்தில் இருந்து வெகுதூரம் சென்று விட்டார்கள்.பெரும்பான்மையானவர்களிடையே சத்தியம் சேர்வதில் இருக்கின்ற தடைகள் பெரும் சவாலாகும் அல்லாஹுவின் கட்டளை எதுவாகவும் இருக்கலாம். ஆயினும் ஈமானில் உறுதியாக இருக்க முஸ்லீம்கள் அதிகபட்சம் முயற்சி செய்யவேண்டி இருக்கிறது.இதுதான் கோடிட்டு காட்டப்படவேண்டிய விடயம்
எதிரியால் விதியென்று உயிரின் வேர் அறுந்து உடல் சாய்கின்ற பொழுது இறுதி மூச்சு ஏகத்துவத்தோடு பிரியட்டும். சிந்தும் குருதி ஊன் நீரன்றி சுவர்க்கத்தின் சிவப்பு கம்பளமாகட்டும். அமைதி எப்போது என்று தெரியாது. ஆயினும் விசுவாசிகளுக்கு ஒதுங்கிக்கொள்ள நேரம் இல்லை சத்தியத்தை நிலைநாட்டும் போரை தொடர வேண்டும்...!!
புரிந்தவர்களுக்கு தெரிந்தது
ReplyDeleteபுரிய முயற்சிக்காதவர்களுக்கு புரியாதது
அல்லாஹ் நம் ஈமானை பாதுகாப்பானாக.. ஆமீன்