தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றிய ஏற்பாட்டில் தேசிய சுகாதார வார நிகழ்வுகள்
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு நுளம்பு வலைகள் கையளிக்கும் நிகழ்வும், சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு வைபவமும் நேற்று திங்கட் கிழமை அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றயத்தின் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிவில் இராணுவ அதிகாரி கேணல் சரத் தென்னக்கோன், அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய சாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எம்.இஸ்மாயில், சர்வோதய அமைப்பின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம்.எல்.எம்.பாரீஸ் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களாக ஐ.எல்.அப்துல் முனாப், எஸ்.எல். முனாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலை வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் இஸ்மாயில் சுகாதார விழிப்புணர்வு தொடர்பாக நீண்ட கருத்தரை வழங்கினார். அத்தோடு ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களது கடமைகள் தொடர்பாக அம்பாரை மாவட்ட சிவில் இராணுவ அதிகாரி கேணல் சரத் தென்னக்கோன் சிறந்த உரையொன்றை நிகழ்த்தினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சர்வோதய அமைப்பின் அனுசரனையோடு நுளம்பு வலைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
சமூகசேவைப் பணியில் ஈடுபட்டுவரும் அம்பாரை மாவட்ட சிவில் இராணுவ அதிகாரி கேணல் சரத் தென்னக்கோன், சர்வோதய அமைப்பின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம்.எல்.எம்.பாரீஸ் மற்றும் அல்- ஜெஸீரா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை மாவட்ட வைத்திய சாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எம்.இஸ்மாயில், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், கவிஞர்: கலாபூசணம் அன்புடீன் ஆகியோரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு உரையாற்றிய கலாபூசணம் அன்புடீன், நுஜா அமைப்பு இந்தப் பிராந்தியத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பினை வழங்கி வருவதாகவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களின் நன்மை கருதி உதவி வருவதாகவும் குறிப்பிட்ட அவர் இந்த அமைப்பின் முக்கியஸ்தர்கள் சமூக ஆளுமை கொண்டவர்களாக சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்டாhர். இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment