Header Ads



முஸ்லிம் பெண்களின் பர்தாவுக்கு தடை விதிக்க கோருகிறார்கள் - கோத்தபய ராஜபக்ஸ


(ஏ எம் எம் முசம்மில்)

“இன்று இந்தநாட்டில் சிறும்பான்மையினருக்கு உரிய உரிமைகளை வழங்கப்படவில்லை எனும்  சர்வதேச அழுத்தங்கள் இந்தநாட்டின் மீது பிரயோகிக்கப்படும் நிலையில், இந்தநாட்டு சிரும்பான்மையினத்தவர்களின் இனப்பரம்பலை குறிப்பிடும் போது கொழும்பில் பௌத்தர்களை விட முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் விகிதாசாரம் கூடியுள்ளதை பிறநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதன் மூலமாக இந்தநாட்டில் சிறும்பான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் நான் எடுத்துக்காட்டிஇருக்கின்றேன்.” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷே அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த  கோதாபய ராஜபக்ஷே,,

 “முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் ஒரு சிறு எண்ணிக்கையை கொண்டவர்கள். அவர்களைப்பற்றி தூக்கிப்பிடித்து நாங்கள் செயற்படுவதால் அவர்களை வீரர்களாக்கும் செயலையே நாங்கள் செய்வதாகி விடும். பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. இணைய தளங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு செயல்படுகின்றார்கள். ஜனாதிபதிக்கும் எனக்கும் சேறு பூசுவதற்கே இவ்வாறு திட்டமிட்டு செயபற்டுகின்றார்கள்.

வெளிநாடுகளில் இருந்தது செயற்படும் அவர்களின் இணையதளங்களை முடக்குவது முடியாத காரியமாக உள்ளது. இந்நாட்டிலிருந்து செயற்படும் அவ்வாறான இணையதளங்களை பற்றி தகவல்களை தந்தால் அவற்றிற்கு எதிராக எடுக்கவேண்டிய  நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து பார்க்கலாம்.முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு  நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் .

அதே வேளை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்.

உதாரணமாக வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். முன்பு பல்கலைகழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள். ஆகவே அதை தடுங்கள் என்று கூறுகின்றார்கள் . நாங்கள் எப்படி அதை தடுப்பது.? ........? என்றும் கேள்வி எழுப்பிய பாதுகாப்பு செயலாளர், “ பொது பல சேனா” எனும் அமைப்பு பௌத்த மதத்தின் வேறு பல முக்கிய காரணங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டதொரு  அமைப்பு. இன்று அதை தோற்றுவித்தவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அது சென்று கொண்டிருக்கின்றது. பெரும்பான்மையான பௌத்த மக்கள் இதன் போக்கை விரும்பவில்லை. ஆகவே நீங்கள் உங்கள் மக்களுக்கு சொல்லுங்கள் அச்சப்பட தேவையில்லை என்று. இந்தநாட்டின் உளவு ததுறையின் பிரதான அதிகாரியாக உள்ளவர் ஒரு முஸ்லிம் ஆவார்” என்றும் குறிப்பிட்டார்.

 இந்த நிகழ்வில் ஜம்மியதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி, செயலாளர் முபாரக் மதனி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன், அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் டீன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர் அ ரஹ்மான், யங் ஏசியா டெலிவிசன்   . எம் ஹில்மி, மலையக முஸ்லிம் மாநாட்டின் செயலாளர் ஏ எம் எம் முசம்மில், பதுளை டீன் பெண்சி உரிமையாளர் நளீம் டீன் (பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி) கண்டி ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள்  உட்பட முப்பது பேர் அடங்கலான குழு இந்தநிகழ்வில் கலந்துகொண்டது.                            

3 comments:

  1. விடிய விடிய ராமாயணம், விடிந்த பிறகு ராமனுக்கு சீதை என்ன உறவு? கதை ஞாபகம் வருது.

    ReplyDelete
  2. காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போன்று தென்பட்டதைக்கண்டு நிம்மதி அடைந்தாலும் இந்நிகழ்வு எம் பலஹீனத்தை மேலும் ஒரு முறை பகிரங்கப் படுத்துவதாகவே அமைகிறது.
    இதற்காய்த்தான் நாம் அனைவரும் உலமாக்கட்சியின் கீழ் ஒன்றுபடவேண்டும் என வலியுறுத்தப்பட்டோம் போலு்ம், உண்மயில் இதுதான் சிறந்த ஒற்றுமை,,,,,, அதுதான் எம் அரசியல்வாதிகழும் நம் நாணயத்தின் சின்னமான உலமாக்கழும் எதை, எப்படிச் சொன்னாலும் தலையை அசைத்து ஆமாப் போடுவது ... இதில் இவர்கள் ஒற்றுமைப் பட்டு விட்டார்கள்.
    அய்யா Akram ராமாயாணம் பாடுவதும் நொண்டிச்சாக்கு சொல்வதும் அவர்களது (அதிகாரிகள்) தேவை. ஆனால் நாம்தான் நம் பிரச்சனையையும் தேவயையும் மறக்காமல் செயலாற்ற வேண்டும்.
    புலிகளைக்கண்டால் போராட்ட ஒற்றுமையும், அதை அழித்த சிங்கத்தைக் கண்டால் அவர்களைத்தூய்மைப்படுத்தி, அவர்கழுக்காய் நிதி சேகரித்து, குட்டினாலும் அமாப்போடும் தலைமைகள் எம் தேவையும் அல்ல அது அஷ்ரபின் இடத்தை நிரப்ப திராணியற்றது.
    கடந்த கால நிகழ்வுகளைப்பார்த்தால் .. இவர்கள் எல்லோரும் நாடாழும் கதிரைக்காய் சமுதாயத்தின் பிரச்சனையை முன் வைத்து நகர்கிறார்கள், சமுதாய்ப் பிரச்சனைக்காய் கதிரையில் அமர்ந்து பின் அது எனக்கு தேவையற்றது என்று எண்ணும் ஒரு சிலரை நாம் அடையாளம் காண வேண்டும்.

    ReplyDelete
  3. islathutku ethirpahe neengal ethu saithalum allah pothumanewen but neenga pengal parthawai thadai withithal athetkum engalukku weru wali teriyum ewwaru pengalai udembai maraikke 1st neenga thing panuge yen pengal udembai mareikke partha anikirarkal endru (than thai, thangai, manaiwi ) udembai weru oruwarukku kate wirumbuweerkala ? ithaithan islam solkirethu 1 penin udembai parke ap pennin kanewenukku mathirem than anumathi ullathu 1st ithe purinchu kollunge Brothers and sisters

    ReplyDelete

Powered by Blogger.