Header Ads



முசலியில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு படகு மூலம் நிவாரணம் விநியோகிக்க ஏற்பாடு


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு தேவையான உணவுகளை நாளை (2012.12.28) வங்காலை பகுதியிலிருந்து படகு மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் கூறினார்.

மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததையடுத்து.அகத்தி முறிப்பு குளத்தின் நீர மட்டம் அதிகரித்ததால் திறக்கப்ட்ட வான் கதவுகளினால் இப்பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,முருங்கன் சிலாவத்துறை பாதை,வங்காலை-அறிப்புத் துறை பாதை,புத்தளம் –மரிச்சுக்கட்டடிப் பாதை என்பனவற்றின் போக்குவரத்துக்கள்,வெள்ள நீர் பாதையினை ஊடறுத்து செல்வதால் முழுமையாக தடைபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதே வேளை முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கையிறுப்பில் உள்ள உணவு பொருட்களையே சில தினங்கள் பயன்படுத்தி வந்ததாகவும்,மேலதிக தேவையான உணவு பொருட்களை மன்னாரிலிருந்தே கொண்டுவர வேண்டியுள்ளதாகவும் முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான் கூறினார்.

அதே வேளை தற்போது கடும் மழை இப்பிரதேசங்களில் பெய்வதால்,சிலாவத்துறை கடற் பிரதேசத்தின் ஊடாக பொருட்களை கொண்டுவருவதிலும் சிரமமான நிலை காணப்படுவதாக பிரதேச செயலளார் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்து தற்போதே மீள்குடியேறி வருவதால்.பாதிப்புக்குள்ளான மக்களை தங்க வைப்பதற்கு போதுமான கட்டிட வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் பள்ளிவாசல்,மற்றும் சில உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூறினார்.குறிப்பாக வைத்திய தேவைகளின் நிமிர்த்தம் இருவர் கடற்படையினரின் படகுககள் மூலம் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் கூறினார்.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவ்வப்போது தங்களுடன் தொடர்பு கொண்டு எடுக்ப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்கி வருவதாக பிரதேச செயலாளர்,மற்றும் முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான்,பிரதி தலைவர் மௌலவி பைரூஸ் ஆகியோர் கூறினர்.

No comments

Powered by Blogger.