மோசமான விளைவு ஏற்படும் என எகிப்து ராணுவம் எச்சரிக்கை
அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணாவிட்டால் மோசமான விளைவு ஏற்படும் என எகிப்து ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ராணுவம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. அரசியல் நெருக்கடிக்கு அனைத்து கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் ஒருமித்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ராணுவம் உறுதுணையாக இருக்கும்.
நாட்டு நலன் கருதி பொதுமக்களும் அமைதி காத்து ஒத்துழைப்பு தர வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என ராணுவம் கோரிக்கை வைத்துள்ளதால், புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
ஆனால், அதிபர் முகமது மோர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளன. எவ்வித திருத்தமும் இன்றி, திட்டமிட்டபடி டிசம்பர் 15ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்த
Post a Comment