மட்டு-காத்தான்குடி தனியார் வைத்தியசாலையின் அநாகரீக செயல் - (படங்கள்)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு காத்தான்குடி 04ம் குறிச்சி கரையோர பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றால் வீசப்பட்ட ஊசி 'இரத்தம் பரீசோதனை செய்த கழிவுப் பொருட்கள் மற்றும் அரசாங்க இலச்சினை பொறிக்கப்பட்ட வைத்தியசாலை பொருட்களின் பெட்டிகள் அடங்கிய ஒரு தொகுதி சட்டவிரோத வைத்தியாலை கழிவுப் பொருட்கள் இன்று புதன்கிழமை காலை பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது..
காத்தான்குடி 05ம் குறிச்சி குபா பள்ளிவாயலுக்கு தினமும் அதிகாலை சுபஹ் தொழுகைக்காக பொது மக்கள் வருவது வழக்கம் அதேபோன்று இன்றும் புதன்கிழமை தொழுகைக்காக பொது மக்கள் கரையோர பிரதான வீதியால் வந்த பொழுது அங்கு இருந்த சட்டவிரோத வைத்தியாலை கழிவுப் பொருட்களை அவதானித்த பொது மக்கள் அதனை ஒதுக்குப் புறமாக அப்புறப்படுத்தி அப்பிரதேச ஊடகவியலாளர்களுக்கும்'பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கும் தெரியப்படுத்தினர்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது மக்கள் குறித்த வீதி மக்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதாலும் குறித்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 'சிறுவர்கள் 'சிறுமிகள் 'இளைஞர்கள் அதிகமாக விளையாட்டுக்ளை கழிக்கும் பொழுது போக்கு இடமாக கருவதாலும் 'குறித்த பிரதேசத்தில் கொட்டப்பட்டுள்ள ஊசி 'இரத்தம் பரீசோதனை செய்த கழிவுப் பொருட்களை சிறுவர்கள் விளையாட்டு பொருட்களாக் கருதி அதனை வீடுகளுக்கு எடுத்துச்சென்று விளையாடுவதன் மூலம் கிருமிகள் பரவுவதற்க்கு வாய்ப்புள்ளதாகவும் 'கழிவுப் பொருட்கள் கொட்டுப்பட்டுள்ள இடத்துக்கு அருகாமையில் பாடசாலை 'பள்ளிவாயல் 'பொது நூலகம் 'மற்றும் சிறுவர் பூங்கா போன்று பொது இடங்கள் காணப்படுவதால் நோய்கள் பரவுதற்கு வாய்ப்புள்ளதாகவும் இதனை உடனடியாக அப்புறப்படுத்தி இனிமேல் இவ்விடத்தில் இவ்வாறான வைத்தியாலை கழிவுப் பொருட்களை கொட்டாமல் பாதுகாப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்கு வேண்டுமேன் அப்பிரதேச பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment