Header Ads



இதுவும் ஒரு ஜாஹிலியத்தான்..!



ஆப்ரிக்க நாடான ஸ்வாசிலாந்தில், பெண்கள் குட்டை பாவடை அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஆப்ரிக்காவில் உள்ள, குட்டி நாடு, ஸ்வாசிலாந்து. இங்கு, மன்னராட்சி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நாட்டின் மன்னர், எம்ஸ்வாட்டி, இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வார். இதற்காக, மேலாடை அணியாத கன்னிப் பெண்கள், குட்டை பாவடை மட்டும் அணிந்து கொண்டு, மன்னரின் அரண்மனைக்கு அணிவகுத்துச் செல்வார்கள். இதில், தனக்குப் பிடித்த பெண்ணை தேர்வு செய்து, மன்னர் எம்ஸ்வாட்டி திருமணம் செய்து கொள்வார். இந்த வகையில் இதுவரை, 13 பெண்களை எம்ஸ்வாட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதற்கிடையே, இந்த நாட்டில், கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார் வந்ததால், அதற்குரிய காரணம் ஆராயப்பட்டது. பெண்கள் குட்டை பாவடை அணிவதால் தான், ஆண்களின் பார்வை, பெண்களிடம் திரும்பி, கற்பழிப்பு குற்றங்கள் அதிகரிப்பதாக, அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, போலீஸ் அதிகாரி எச்லீட்டா கூறியதாவது: ஸ்வாசிலாந்தில், பெண்கள் இனி, குட்டை பாவடை அணியக்கூடாது. மீறி அணிந்தால், அவர்களுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும். மன்னர் திருமணம் செய்து கொள்வதற்காக, நடக்கும் திருவிழாவில் மட்டும், பெண்கள் மேலாடை இல்லாமல், குட்டை பாவடை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, போலீஸ் அதிகாரி கூறினார்.


No comments

Powered by Blogger.