முஹம்மட் முஸம்மிலின் நிதியுதவியில் வறிய மாணவர்களுக்கு உதவி
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஹம்மட் முஸம்மிலின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கிழக்கிழங்கை சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் 85 வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களின் கல்விக்காக பாடசாலை கொப்பி மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 16-12-21-012 ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் மீள்குடியேற்ற பிரதேச றூகம் மட்- அல்-அமான் வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் ஏ.எம்.ஏ.றாஸக் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது முஹம்மட் முஸம்மிலினால் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜெ.எல்.செட்.ஆப்தீன் 'மற்றும் கிழக்கிழங்கை சமூகு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் உவைஸ்' கிழக்கிழங்கை சமூக அபிவிருத்தி நிறுவன செயலாளர் கொழும்பு பல்கலைக்கழக வர்த்தக பட்டதாரி அஹமட்லெப்பை முஹம்மட் றிகாஸ்' கிழக்கிழங்கை சமூகு அபிவிருத்தி நிறுவன தவிசாளர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஐ.எம்.தாலிப் ( தாரிஸ்)மற்றும் கிழக்கிழங்கை சமூக அபிவிருத்தி நிறுவன பிரதி செயலாளர் வெள்ளத்தம்பி றஹீம் மற்றும் கஸ்ட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Post a Comment