Header Ads



இயற்கையின் சீற்றம் என்று எதுவும் இல்லை


(by faji)

சிவப்பு மழை,மஞ்சள் மழை,மீன் மழை,பனிமழை,கல்மழை,அடுத்து நெருப்பு மழையாகவும் இருக்கலாம்.இயற்கையின் சீற்றம் என்று மனிதன் குமுறுகிறான்.இயற்கை என்று எதுவும் இல்லை. இயற்கை விஞ்ஞான கோட்பாடு இஸ்லாத்தில் இல்லை என்கின்ற பொழுது இயற்கையின் சீற்றம் என்பது இறை நிராகரிப்பாகும். இது இறைவனின் கட்டளை.

சத்தியம் முஸ்லீம்களாலும் மற்றவர்களாலும் அவமதிக்கப்படும் போது ஏற்படும் நிகழ்சிகள். ஈமானிய இருதயங்களின் வலியின் விளைவாகவும் இருக்கலாம்.பல தேசங்களின் இருதயங்கள் இன்று அழுகின்றது. கிழக்கே ஒருபூகம்பம் தோன்றியது.மேற்கே ஒன்று நிகழலாம்.கிழக்கே சூரியன் உதிக்கும் கட்டளை மறுக்கப்பட்டு மேற்கே உதிக்கும் நிகழ்ச்சியை உலகம் நோக்கி நகர்கிறது.

ஆன்மீக வறட்சியின் எதிர்விளைவை உலகம் இன்று சந்தித்து கொண்டிருகிறது. முஸ்லிம்களின் சனத்தொகை கூடிவிட்டது என்றும் பொருளாதாரத்தில் செழித்து விட்டார்கள் என்றும் பெருமை பேசுகின்றார்கள்.ஆனால் சத்தியம் நிலைநாடப்படுகின்ற அளவும் வறுமைக்கான நிவாரணமும் மிகவும் மந்தமாக இருக்கிறது.

நாம் கடையில் வாங்கும் பொருளுக்கு இருக்கும் கலாவதி திகதியை போல மனித இனத்திற்ற்கு மரணத்திகதி நெற்றியில் ஒட்டப்படவில்லை.உண்மையான முஸ்லிம் மறுகணம் மரணத்தை சந்திக்க தயாராக இருப்பான்.எனவே உண்மையாக  சத்தியத்தை  கடைப்பிடிக்கும் முஸ்லிம்களாக வாழ முயற்சிப்போம்.

No comments

Powered by Blogger.