Header Ads



முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் குழப்பம் ஏற்படுத்த சதி - பதுளையில் ஹக்கீம்

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 02-12-2012 மாலை பதுளை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பதுளையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அங்கு சென்றுள்ள  ரவூப் ஹக்கீம் மேலும் உரையாற்றுகையில், 

ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்ட போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன. அவ்வாறானதொரு குற்றப்பிரேரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதமும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளது.

இதன்போது முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இல்லாமல் செய்வதற்காகவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது நாம் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சதி முயற்சிசெய்து வருகின்றனர்  அண்மைக்காலமாக பதுளையிலும் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இதில் ஒரு அங்கமாவே பார்க்கவேண்டியுள்ளது

பதுளையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் கொண்டுசென்று அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பதுளையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. சதி எனில் அந்த சதிகாரர்களை நீதி அமைச்சராக இருந்து கொண்டு உங்களால் ஏன் கண்டு பிடிக்க முடிவதில்லை. நமது சமூகத்துக்கு இன்று தேவைப்படுவதெல்லாம் உங்களின் வெறும் உளறல் அறிக்கைகளோ கண்டனங்களோ வாய்ச் சவாடல்களோ அல்ல...மாறாக உரிய நடவடிக்கைகளாகும். இது வரையில் வாய் திறந்து ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை. அமைச்சர்களும் எம்பிக்களும் வெறும் ஆமைகளாகவும் ஊமைகளாகவும் பாராளுமன்றத்தில் வீற்றிருப்பதால் நம் சமூகத்திற்கு என்ன பயன் ? கிழக்கு மாகாணத் தேர்தல்களின் போது "நாம் பள்ளிகளை உடைக்க மாட்டோம்" என ஜனாதிபதி பெரிதாக பீற்றிவிட்டுச் சென்றார்.....ஆம் அவர் சொன்னது உண்மை...பள்ளிகளை உடைக்கவில்லை....ஆனால் அனுராதபுரப் பள்ளியொன்றுக்கு நெருப்புத் தான் வைத்தார்கள்...அதனால் உடைக்க வேண்டிய தேவையேற்படவில்லை. ஜனாதிபதியின் தாளத்திற்கு ஆட்டம் போடும் அமைச்சர்கள் எம்பிமார்கள் இருக்கும் வரை நாம் கவலையே படத்தேவையில்லை....அத்துடன் இது வரை 20 அல்லது 25 நமது மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் நடந்தேறின. இதோ அவற்றுக்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்று எந்த அமைச்சர் எம்பிமார்களாலாவது வாய் திறந்து கூற முடிந்ததா ? வெறும் அறிக்கை விடும் ஜாம்பவான்களாகவும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்காக துதி பாடும் வீணை வித்துவான்களாகவும் காலத்தைக் கடத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் தற்போதைய தெளிவான விடயமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.