Header Ads



சிரியாவில் மிருகத்தனம் உச்சத்தை எட்டியுள்ளது - பான்கீ மூன்


சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் போராளிகளுக்கும் கடந்த ஓராண்டாக உள்நாட்டுப் பேர் நடந்து வருகின்றது. இந்த போரில் இதுவரை 40 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். நேற்று நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 80-க்கும் மேற்பட்டேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான பொது மக்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், 'சிரியாவை விட்டு வெளியேறும் அகதிகள் எண்ணிக்கை 7 லட்சமாக உயரக்கூடும். அந்நாட்டில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் பயங்கரமானது.  மிருகத்தனத்தின் உச்சத்தை வன்முறை எட்டியுள்ளது'. என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.