Header Ads



'தேசத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு' - ஆய்வு மாநாடு


இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் தேசத்தின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு காத்திரமாக பங்காற்றி வருகின்றனர். இத்தகைய பங்களிப்புகள் ஆய்வு ரீதியாக முன்வைக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை முன்வைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும், இளம் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் ஷரீஆ கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம் சமூகத்திலும் ஆய்வுக் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காகவும் 'தேசத்தை கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு_ என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பின்வரும் தலைப்புகளுக்கு உட்பட்டதாக இலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்களிடம் இருந்து ஆய்வுக்கான சுருக்கங்கள்கள் கோரப்படுகின்றன.

தலைப்புக்கள்:

- தனிமனித ஆளுமை விருத்தியில் இஸ்லாத்தின் பங்கு.
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இன ஐக்கியம் மற்றும் சகவாழ்வு
- கல்வி, பொருளாதார மற்றும் கலாசாரப் பிரச்சினைகளுக்கான இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள்.
- மொழியியல் பங்களிப்பு

ஆய்வின் சுருக்கம் 250 சொற்களுக்குள் அல்லது A4 தாளின் ஒரு பக்கத்திற்கு மேற்படாத வகையில் அமைய வேண்டும். ஆய்வு சுருக்கங்கள்  மீள்பரிசீலினை செய்யப்பட்டு தெரிவு செய்யப்படும் ஆய்வுகளுக்கு மாத்திரம முழு ஆய்வுக்கட்டுரை  சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். ஆய்வுகளின் தொகுப்பு மாநாட்டில் வெளியிடப்படும்.

ஆய்வுக்கட்டுரைகள் அரபியில்,சிங்களத்தில்,தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அமையலாம்.

இடம் : கலை பீடம், பேராதனை பல்கலைக்கழகம், பேராதனை, இலங்கை.

முக்கிய திகதிகள் :

சுருக்கம் சமர்ப்பித்தல் : 15-01-2013
முழு ஆய்வினை சமர்ப்பித்தல் : 15-02-2013
ஆய்வு மாநாடு:   02-03-2013

Conference Co-Coordinators:
Dr. M.Z.M. Nafeel,
Head, Department of Arabic and Islamic Studies,
Faculty of Arts, University of Peradeniya. Peradeniya
As-Sheik, M.U.M. Ramzy,
Principal, Islahiyya Arabic College, Madampe


பதிவுகள் :
2013 பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்  பதிவுத் தொகை: 250 Ru (மாணவர்களுக்கும் ஆய்வு சமர்பிப்பவர்களுக்கும் இலவசம்)

Postal Address: Conference Secretariat, International Research Conference, Department of Arabic and Islamic Studies, Faculty of Arts,
University of Peradeniya, Peradeniya, Sri Lanka.
Contact Details: 0773585911, 0777356342, 0775025498 and 0772383511, Email: send.irc@gmail.com
Website: http://www.pdn.ac.lk/arts//arabic/
Sponsored by: Alumni Association of Islahiyya Arabic College, Madampe – Sri Lanka.















No comments

Powered by Blogger.