குருநாகலில் விடாது பெய்யும் மழை - பறகஹதெனியாவில் வெள்ளத்தில் அடிபட்ட கார் (படம்)
(இக்பால் அலி)
குருநாகல் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பெரு மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய என்ற இடத்தில் கார்ரொன்று பாதைவிட்டு விலகி நீரில் முழ்கியுள்ளன. பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசத்தில் இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் வீதியில் இன்று பறகஹதெனிய என்ற இடத்தில் இன்று காலையில் கண்டியிருந்த வந்த காரொன்று பாதையில் கூடுலான வெள்ளம் போதன் காரணமாக பாதையை விட்டு விலகி நீரில் மூழ்கியுள்ளன. இதில் பயணம் செய்த கணவனும் மனைவியும் எந்தவிதமான உயிர் அபத்துமின்றி பொது மக்களால் மீட்டெடுக்கப்பட்டனர்.
இந்த கடும் மழை காரணமாக பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆயிரக்கான பெரும் போக வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment