Header Ads



நற்பிரஜைகளை உருவாக்கும் பணிக்கு மடவளை வை.எம்.எம்.ஏ. பங்களிப்புச் செய்துள்ளது



(ஜே.எம்.ஹபீஸ்)


இலங்கையில் தற்போது உருவாகி வரும் பதிய பிரச்சினைகளுக்கு கூட்டு மொத்தமாகப் பேரினச் சமூகமன்றி ஒரு சில குறுகியவாதமே காரணம், எமக்கெதிராக பல்வேறு சதிகள் நடக்கின்ற இக்காலக்கட்டத்தில் நாட்டிற்காக பயனுள்ள பணிகளை நாம் செய்யும் போது அதனை இலகுவாக முறியடிக்கமுடியும் என்று கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி கால் நடைவளர்ப்புத் துறை அமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.

(22.12.2012) இன்று மாலை மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற கலைவிழா ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ பாலர் பாடசாலை நடத்திய இவ்வைபவத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,,

சிறுபான்மை இனங்களான நாம் எமது இருப்பை பலப்படுத்த வேண்டுமாயின் மற்ற சமூகங்களுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும். வட கிழக்கில் தமிழ் மக்களுடனும் வடகிழக்கிற்கு வெளியே சிங்கள மக்களுடனும் ஒற்றுமையாக வாழ்வது முஸ்லிம்களைப் பொருத்தவரை தவிர்க்க முடியாதது. இலங்கை மக்களுக்கிடையே இன ஒற்றுமையை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். எமது பங்களிப்பையும் நாட்டுக்கு வழங்க வேண்டும். எங்களுக்கும் மற்றவர்களைப் போன்று எல்லா உரிமையும் வேண்டும். அதே நேரம் நாமும்; நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

எமக்கெதிராக பல்வேறு சதிகள் நடக்கின்ற இக்காலக்கட்டத்தில் நாட்டிற்காக பயனள்ள பணிகளை நாம் செய்யும் போது அதனை முறியடிக்கமுடியும். இன்று இலங்கையில் கலாச்சாரச் சீரழிவுகளை சந்தித்து வரும் இக்காலக்கடட்தில் வடகிழக்கிற்கு வெளியே வாழ்ந்து கொண்டு எமது கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் உங்களைப் பாராட்ட வேண்டும்.

வடகிழக்கிற்கு வெளியே வாழும் நீங்கள்  தமிழையும் சிங்களத்தையும் பேசுவது போல் ஆங்கிலத்தையும் அரபு மொழியையும் பேசக் கற்றுக் கொள்ளவேண்டுமு. எமது உயிர்நாடியான குர்ஆனை வெறுமனே பார்த்து வாசிப்பதை விட அதனை விளங்கிக் கொள்ளு மளவிற்கு நாம் அரபு மொழியையும் கற்க வேண்டும். இதற்கான  நிலையை எமது நிறுவனங்கள் உடன் உருவாக்க வேண்டும். அப்படியான பணிக்கு என்னால் இயன்றதைச் செய்ய தயாராக உள்ளேன்.

என்னைப் பொருத்தலரை நான் ஏழரை வயதிலே திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு ஒரு ஹாபிஸ் ஆனேன். அக்காலத்தில் ஹாபிழ்களைத் தேடுவது சிரமமான காரியம். இதன் காரணமாக 1972 முதல் 1978 வரை ஆறு வருடங்களாக கண்டி இராஜ வீதியிலுள்ள பள்ளியில் நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுவிக்கும் பணியை மேற்கொண்டேன். அரசியல் பிரவேசத்தின் முதற்பணியான வேட்பு மனு அனுப்பும் வரை அதிகாலையில் உடற் பயிற்சியில் ஈடுபடுவேன். தன் பிறகு அது எனக்குத் தவறி விட்டது.

இதனை ஏன் கூறுகிறேன் என்றால் எமது அனைத்துப் பணிகளுக்கு மத்தியிலும் பயிற்சிகள் தேவை.விசேடமாக நாம் சுகதேகியாக வாழவேண்டும். அதற்கு உடற்பயிற்சிகள் கட்டாயம் தேவை.

மாகாண அமைச்சரான பின் விழாக்களுக்கு என்னை பிரதம அதிதியாக அழைப்பர். அவ்வாறு சென்ற விழாக்களில் பாலர் பாடசாலை பரிசளிப்பு வைபவங்கள் ஐந்திற்குச் சென்றுள்ளேன். அவற்றுள் நான் ரசித்த, அல்லது கண்டகாட்சிகளில் எல்லாவற்றையும் விட அதிகூடிய  சிறப்பை இங்கு கண்டேன். அதற்குப் பலகாரணங்கள் உண்டு. அதிலொன்று நான்கு மொழிகளில் இங்கு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அதேநேரம் இது 29 வது வருடப் பரிசளிப்பு என அறிகிறேன் இவை இரண்டையும் இணைத்துப் பார்க்கும் போது கடந்த 19 வருடங்களாக நற்பிரஜைகளை உருவாக்கும் பணிக்கு மடவளை வை.எம்.எம்.ஏ. பங்களிப்புச் செய்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

எனவே  உரிமை வேண்டும் என்பதைப் போல் தமது கடமையையும் செய்துள்ள ஒரு சமுகத்தின் வைபவம் ஒன்றில் தொலை தூரமிருந்து வந்து கலந்து கொண்டது எனக்கு மற்றற்ற மகிழ்ச்சியாகும் என்றார்.




No comments

Powered by Blogger.