ஹலால் சான்றிதழ் பணம் எவ்வாறு செலவாகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
இலங்கை மக்களில் 7 வீதமானோரே ஹலால் சான்றிதழுடைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்பதால் ஹலால் சான்றிதழை தடை செய்ய வேண்டும் என்பது பிழையானது என்றும் ஆனாலும் இதற்காக செலுத்தப்படும் பணம் எங்கே போய்ச்சேருகிறது என்பது ஆராயப்பட வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளமையை முஸ்லிம் உலமா கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது,
சில இனவாதிகள் ஹலால் சான்றிதழை தூக்கி பிடிப்பதற்கு அரச சார்பு இனவாதிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தலைவரின் இது சம்பந்தமான கருத்து பாராட்டுக்குரியதாகும். ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவது அந்த உணவை முஸ்லிம்கள் உண்ணலாமா இல்லையா என்பதற்கான உத்தரவாதம் மட்டும்தான் என்பதை அவர் விளங்கியுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
பொதுவாக இந்து, பௌத்த மக்களில் சிலர் உணவகங்களுக்கு சென்றால் அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கேட்டு உறுதிப்படுத்துவதை அன்றாடம் நாம் காண்கிறோம். விமானங்களில் கூட அசைவமா சைவமா என கேட்ட பின்பே உணவை வழங்குகிறார்கள். இவ்வாறே ஒரு முஸ்லிம் தனக்குரிய உணவு ஹலாலா (ஆகுமானதா) இல்லையா என்பதற்கான உத்தரவாதமே இந்த ஹலால் பத்திரமாகும். இதனை எதிர்ப்பதன் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே மோதல்களை ஏற்படுத்தி இதன் மூலம் வாக்குகளை பெற சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அதே வேளை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஹலால் சான்றிதழுக்கான வரவுகள் சிலவுகள் எவ்வளவு என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். கடந்த வருடம் கண்டியில் நடைபெற்ற அதன் வருடாந்த மாநாட்டில் கூட உலமா சபையின் வரவு செலவு பற்றிய அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. அதே போல் அதன் நிர்வாகமும் பல வருடங்களாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படவில்லை. சில அரசியல் கட்சிகள் போல் உலமா சபையும் சிலரின் ஏக போக சொத்தாகவும், ஆயுட்கால தலைவர், நிர்வாகம் என்ற நிலையே காணப்படுவது கவலைக்குரியதாகும் என்பதை உலமா கட்சி அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்துள்ளது. அவ்வப்போது நாம் பகிரங்கமாக வழங்கும் எமது ஆலோசனைகளை உலமா சபையின் நிர்வாகம் ஏற்காததன் காரணமாக இன்று முழு முஸ்லிம் சமூகமும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
உலமா சபையின் கணக்கு விபரம் என்பன அதன் உறுப்பினரான எமக்குக்கூட அதுவும் கல்முனை உலமா சபையின் உப தலைவரான எமக்கே தெரியாத நிலையில் மாற்று சகோதரர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? இதன் காரணமாக உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி என்ற வகையில் எம்மாலும் இனவாத கட்சிகளுக்கு பதில் அளிக்க முடியாதுள்ளது.
ஆகவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவரையும், ஊடகங்களையும் உலமா சபை அழைத்து ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை தெளிவு படுத்த வேண்டும். அந்தத்தெளிவு சரியானதா என்பதை தே. தே. இயக்கத்தலைவர் வாயிலாக ஊடகங்களுக்கு சொல்லப்பட வழி சமைக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளாhர்.
intha ulama olunkaha news ellam parpathillaiya.senra varudam acju ithatkana vilakkaththai koduththuvittathu.ivarai ponra suyanalavirumpihalal thaan namuthu samoohaththitku ketta payar. j-muslim ivarin arikkaihalai ungal web il pirasurikka vendam.
ReplyDeleteஉங்களது அறிக்கை மிகவும் கவலை அளிக்கிறது.. இது மிகவும் கண்டிக்க பட வேண்டிய விடயம்.. முதலில் உங்கள் உலமா கட்சியின் விபரங்களை வெளியிடவும்.. அதே போல் நீங்கள் பாராட்டியவரும் அவரது இயக்கத்தின் விபரங்களை அறிவிக்கட்டும்..
ReplyDeleteதெரு நாய் குலைக்கிறது என்றிருந்தால், உள்வீட்டு நாயும் குலைக்கிறது..!!!!!
அவுதுபிள்ளஹி மினசைதாநிர்ராஜீம்.... யா அல்லாஹ்.. எங்களை இந்த பாதகர்களிடம் இருந்து முஸ்லிம்களை பாதுகாத்தருல்வீராக...!!
sheik mubarak awarhal ungaluku panam kidaikkalaya.....
ReplyDeleteayyyoooo pawam.... ACJU awarukkum evvalavu sari kodungapa
wayitrelichalla kaththuraru
யார் யாருக்கு விளக்கம் கூறுவது.. நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறீர்கள்.. உலமா சபை இஸ்லாம் பற்றி பேசுகிறது.. அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகவும்.. ஏனையவர்களுக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து வருபவர்கள்.. நீங்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானது.. உங்களது அறிக்கை ஒரு பொருப்பற்றதாக உள்ளது..! இதற்காக நீங்கள் மன்னிப்புக் கூற வேண்டும்... உங்களை இறைவன் நேர்வளிப்படுத்துவானாக.. ஆமீன்
ReplyDeleteஇவர் எந்தப்பள்ளியில் கல்வி கற்ற மௌலவி எந்த நேரத்தில் எதை எழுதுவது, எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றும் செயல் இதுதான் இதையெல்லாம் நீங்கள் பேசிதிர்க்க வேண்டிய விடையம் ,இவர் ஒரு சுயநலக்காரன் என்பது தெளிவாகக் தெரிகிறது.இந்தஇணையத்தில் ஏன் இதையெல்லாம் uploadசெய்கிறது.
ReplyDeleteUlama katchiyai rattu seyya nadawadikkai edukkumaru ulama sabayai paniwanpudan kettuk kolhintren
ReplyDeletesilar engum sabai kulappigal.eninum paditha oruvar athilum oor ulama ivvaaru ACJU vitkku bahirangamaha ethirppugal ulla nilayil,neerum ivvaaru pesuvadu kadumayaga kandikka pada thakkadu,idilum jananayagam enra peyaril arasiyalai nulaikka vendam.oru thalivar avar seriyaga iyanguvarin avare aayul thalivaraaga iruppinum evvida pirachinayum illai.naam ACJU mutrilum kattu paduvdu 'karuppinathavar un meedu thalivar aainum avarukku kattuppppada vendum'enbadukku amaiya em meedu kadamai,pls giv support 2 maintain the ACJU,DO NOT AGAINST.ev1 shd want to b one man show,itz really bad.
ReplyDeleteAnniyavarhalukku Vilakkam Koduppathatku munnar amathu Mubarak avarhalukku islathai patri vilakkam kodukkaum
ReplyDeleteஇவருக்கு யாரையாவது குறை சொல்லி கொண்டு இருப்பதே வேலையாகிவிட்டது.
ReplyDeleteஇவர் விளம்பர பித்தன்.
பிழை பிடிக்கும் புலவரா ?
அக்கு பேச தான் வேண்டும் அவர் அதை அணுகும் முறை தான் பிழை