Header Ads



களியோடை அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை - ஆரிப் சம்சுடின்


(எம்.எம்.ஏ.ஸமட்)

களியோடை அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுடின் தெரிவித்தார்

இதுதொடர்பில் மாகாண சபை உறுப்பினரும், இணைப்பாளருமான ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டதாவது,

களியோடை அபிவிருத்தி இத்திட்டமானது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் மேற்கொள்ளப்படவுள்ளது இத்திட்டத்திணை முன்னெடுக்கும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டார். 

இத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கூட்டம் அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடபெற்றது.  இக்கூட்டத்தில் களியோடை அணைக்கட்டு அபிவிருத்தி வேலைகள் சம்பந்தமாகவும் களியோடை ஆற்றிலுள்ள மண் அகற்றுதல் சம்பந்தமாகவும் பின்வருவன கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அக்கரைப்பற்று நீரப்பாசன பொறியியலாளர் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்பில் இதனை விடுவதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் நிந்தவூர் பகுதியில் காணப்படும் மண்ணை கல்முனை நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களும் எஞ்சியுள்ள வேலைகளையும் அணைக்கட்டு போடும் வேலைகளையும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளவும் இதற்கான இயந்திரங்களை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பெற்றுத்தருவதாக உறுதிளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் உதுமாலெவ்வை உட்பட பல்வேறு திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




No comments

Powered by Blogger.