கல்முனையில் நவீன பலவியாபார கட்டிடத் தொகுதி அமைப்பது பற்றிய கலந்துரையாடல் (படம்)
(சௌஜீர் ஏ. முகைடீன்)
கல்முனையில் நவீன பல்வியாபார கட்டிடத் தொகுதி (சொப்பிங் கொம்லக்ஸ்) அமைப்பது தொடர்பாக ஆசிய மன்றத்தின் கொரிய நாட்டு ஆராய்ச்சியாளரான திருமதி கியோங்ஹவா ஹாவுடன் நேற்று (11.12.2012) முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்துரையாடினார்.
குறித்த கொரிய நாட்டு குழுவினர் கல்முனையில் நவீன பல்வியாபார கட்டிடத் தொகுதி (சொப்பிங் கொம்லக்ஸ்) அமைப்பது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு அதற்கான செலவீனங்களையும் மதிப்பீடு செய்து அறிக்கையினை முதல்வரிடம் கையளித்தனர். அச்செலவீனத்தில் ஒரு பகுதியினை ஆசிய மன்றம் வழங்குவதற்கும் உடன்பாடு காணப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறித்த கட்டிடத் தொகுதியினை அமைத்துத் தருமாறு முதல்வர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்அறிக்கை சமர்ப்பிக்கப்பட்து குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிய மன்றத்தின் கிழக்குமாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் முதல்வர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான தம்மிக, சசிதரன், ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment