கண்டியில் தீ விபத்து ஒ ஒருவர் மரணம் (படங்கள் இணைப்பு)
(ஜே.எம்.ஹபீஸ்)
கண்டிநகரில் மூன்று மாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத் தீ விபத்து ஏற்பட்டமைக்கு நாசகார செயல் காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீவிபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து கொழும்பு வீதி, யட்டிநுவர வீதி ஊடாக கதிர்காம கோவில் ஒழுங்கையின் 300 மீற்றர் தூரம் வரை இரத்தக்கறை படிந்து காணப்பட்டதையடுத்து அவ்விடத்தை பொலிசார் சேதனையிட்ட போது கையில் படுகாயங்களுடன் தங்க ஆபரண பட்டறை வைத்திருந்த நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த தீ விபத்துக்கு குறித்த நபர் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் மேற்படி தீப் பிடிப்பதற்கு இவ்விடத்தில் ஏதோ ஒரு பொருள் வெடித்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, அவ்விடத்தில் காணப்படும் சிதைவுகள் ஒரு வெடிப்புக் காரணமாக தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment