Header Ads



இலக்கியமும், இஸ்லாமிய இலக்கியமும் ஒன்றல்ல


(பாஜி)

இஸ்லாமிய இலக்கியம் என்பது இஸ்லாத்தின் வரையறைக்குள் இருந்து பார்க்கக்கூடியதாக இருக்கவேண்டும்.தமிழ் இலக்கியதினுள் இஸ்லாமிய இலக்கியம் மொழிரீதியாக பிணைத்திருக்கிறது. இலக்கியவாதி  வேறு இஸ்லாமிய இலக்கிய வாதி வேறு.இஸ்லாமியர்கள் எழுதுகின்றவை எல்லாம் இஸ்லாமிய இலக்கியம் என்று  கூறமுடியாது.அது இலக்கியம் என்றே கூறலாம். இஸ்லாமிய இலக்கியம் என்பது இஸ்லாத்தின் வரையறைக்குள் இருந்து பார்க்கக்கூடியதாக இருக்கவேண்டும்.அளவுகடந்த கற்பனையின் எல்லையில் நின்றுகொண்டு நடக்காததை நடந்ததாக வெளிகொனர்வதும்.காணாத கனவை கண்டதாக கூறுகின்றதை  இஸ்லாம் கண்டிப்பதற்கு நிகரானது.வெறும் கற்பனைகளுக்கு  எழுத்துருவம் கொடுப்பது இஸ்லாமிய இலக்கியமாகிவிடாது..உண்மையான உணர்ச்சியின் எல்லையில் நின்று வடிவம் கொடுக்கபப்படவேண்டும்.

ஆபாச வார்த்தைகளும் தனிமனிதனுக்கான புகழ்ச்சியும் விலக்கப்பட்டதாக இருக்கவேணும்.எல்லைகடந்த நேசத்தின் வெளிப்பாடு அல்லாஹுவிற்கும் அவனது ரசூலுக்கும் மாத்திரம் உரித்தானது. நபிக்கு இறைவன் நபித்துவத்தை மாத்திரம் கொடுத்தான் கவித்துவத்தை கொடுக்கவில்லை.குர்ஆன்  சிறந்த இலக்கிய நடையில் அருளப்பட்டு இருக்கிறது.நபிகளாருக்கு இலக்கிய ஆற்றல் வழங்கப்பட்டு இருந்தால் குர்ஆனின் உண்மைத்தன்மையில் மக்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். இஸ்லாமிய வரையறை மீறாத கவிதைகளை நபி அவர்கள் நேசித்து இருக்கிறார்கள். கவிஞர் ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்களை பக்கபலமாக இருக்க பிரார்த்தனை செய்த ஹதீஸ் ஸஹீஹுல்புகாரீயில் பதிவாகி இருக்கிறது-3612,4123,6152.மேலும் திர்மிதி ,அபூதாவுத் போன்றவற்றிலும் பதிவாகி இருக்கிறது. 

ஒரு இஸ்லாமிய இலக்கியவாதிக்கு கற்பனை வளம் தேவை இல்லை சிறந்த ஆன்மீக தளமே கரு. அங்கிருந்துதான் உருவாகவேண்டும்.வெறும் கற்பனை கலவைகளை கொட்டித்தீற்பது இலக்கியம் அல்ல.சத்தியத்தின் வரையறைக்குள் இருந்து உதிர்கின்ற எழுத்துக்கள் இறைவனின் ஞானத்தில் உதிப்பவை. அவை மறுமையின் சாட்சியங்களாகும்.அவற்றிற்கு உயிரோட்டம் இருக்கிறது. சத்தியத்தின் நாவன்மை பலமிக்கது. 

குறிப்பு-சகோதரர் சுபைர் மீரான் அவர்கள் விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்காக குறிப்பிட்டு இருக்கும் இறைவசனத்தை தனது தேவையின் கோணத்தில் இருந்து பார்க்காமல் அது அருளப்பட்ட சந்தர்பத்தையும் ஆழத்தையும் அறிந்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகிறேன்  


1 comment:

  1. யாழ் முஸ்லிம் இணையத்தில் பாஜி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள "இலக்கியமும், இஸ்லாமிய இலக்கியமும் ஒன்றல்ல" என்ற கட்டுரை, "கலாநிதி எம்.எஸ்.எம். அனஸின் உரைக்கு மறுப்பு" என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எந்தக் கருத்துக்களையும் மறுப்பதாக அமையாமல், கட்டுரையாசிரியர், தான் 'இஸ்லாமிய இலக்கியம்' என்ற வார்த்தைகள் மூலம் கருதும் ஒன்று, எவ்வாறு பொதுவான இலக்கியத்தில் இருந்து வேறுபடும் என்பதனை விளக்குவதாக அமையப்பெற்றுள்ளது. ஆகவே, பாஜி என்ற பெயரிலே எழுதியவரின் கட்டுரையின் முன்பகுதிகள் குறித்து எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்கவேண்டிய தேவை இல்லை.


    அவர் குறித்துக் காட்டும் வரையறைக்குள் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நாடகங்களோ, சீராப்புராணமோ இல்லை என்பதை அவரே அறிவார் என நம்புகின்றேன். அகவே அவரின் கருத்தின் படி, சீறாப்புராணம், முஸ்லிம் சேவை நாடகங்கள் உட்பட, முஸ்லிம்களாக அறியப்படுபவர்களால் உருவாக்கப் பட்டுள்ள பெரும்பாலான இலக்கியங்கள் இஸ்லாத்தின் வரையறைகளை மீறி, இஸ்லாமிய இலக்கியம் என்று கருதப்பட முடியாதவையாக உள்ளன என்பது தெளிவு. கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்களும் இந்த நிலைப்பாட்டினை புரிந்துகொள்வார் என்றால் மிக்க மகிழ்ச்சியே.


    இன்று சிலரால் இஸ்லாமிய இலக்கியங்கள் என்று கருதப்படுபவற்றில் அதிகமானவை இந்து மத, கிரேக்க தத்துவங்களின் பாதிப்பில் உருவான சூபித்துவம் என்கின்ற மார்க்க முரண் கொள்கையினை அடியொற்றி, அக்கொள்கையில் திளைத்தவர்களால் உருவாக்கப்பட்டவையே. ஆகவே அவற்றில் இஸ்லாத்தின் வரையறைகளை தேடுவது கொம்புள்ள குதிரை தேடுவது போன்றதே.


    "சத்தியத்தின் வரையறைக்குள் இருந்து உதிர்கின்ற எழுத்துக்கள் இறைவனின் ஞானத்தில் உதிப்பவை. அவை மறுமையின் சாட்சியங்களாகும்." என்ற வசனங்களை, பாஜி அவர்கள் இஸ்லாத்தின் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முன்வைத்தார் என்பதனையும், அந்த வசனங்கள் மூலம் எதனை சொல்ல நாடுகின்றார் என்ற விளக்கத்தினையும் வழங்குவாரேயாக இருந்தால் நன்றாக இருக்கும்.




    குறிப்பு : நான் குறிப்பிட்டுள்ள குர் ஆன் ஆயத்துக்களுக்கு இறங்கிய சந்தர்ப்பம் தொடர்பான நிகழ்வுகள் இருந்த பொழுதும், இலக்கியம் என்ற பெயரில் பொய் சொல்லுகின்றவர்களுக்கு அவ்வசனங்கள் பொருந்திப் போவதனாலேயே அவற்றைக் குறிப்பிட்டேன். குர் ஆனில் அதிகமான ஆயத்துக்களுக்கு இறங்கிய சந்தர்ப்பம், நிகழ்வுகள் உள்ளன என்பதனை அறிவோம். அவ்வாயத்துக்கள் அனைத்தையும் 'இறங்கிய சந்தர்ப்பம், நிகழ்வுகளு 'டன் மட்டும் மட்டுப் படுத்திக் கொள்ள முயல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை. நான் குறிப்பிட்ட குர் ஆன் வசனங்கள், குறிப்பிடப்பட்ட கருத்திற்கு பொருத்தமில்லாத, முற்றிலும் முரண்பட்டவையாக இருந்தால் சுட்டிக் காட்டும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.



    ReplyDelete

Powered by Blogger.