எதிர்ட்சி தலைவர்கள் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டை கைவிட்ட மொஹமட் முர்ஸி
எகிப்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தேசத் துரோக குற்றச்சாட்டை அரசு கைவிட்டுள்ளது. பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை அனுசரித்துச் செல்லும் வகையில் அந்நாட்டு அதிபர் முகமது மோர்ஸி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் முகமது எல்பரதே, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அமர் மூஸô, ஹம்தீன் சபாஹி ஆகியோர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூஸô, சபாஹி ஆகியோர் மோர்ஸியை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.
முன்னதாக அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாகக் கூறி அந்த மூவர் மீதும் தேசத் துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டது
Post a Comment