Header Ads



மலாலாவின் தந்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராக நியமனம்



தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான சிறப்புத் தூதர் கோர்டன் பிரெüன் அறிவித்தார். லண்டனில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் மலாலா, கல்விக்கான பிரசாரத்தில் தந்தையுடன் சேர்ந்து பணியாற்றுவார் என்றும் அவர் கூறினார். ஆசிரியராக மட்டுமின்றி, பள்ளிகளை மூடும் தலிபானின் நடவடிக்கையை எதிர்த்த ஜியாவுதீன், இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கோர்டன் குறிப்பிட்டார்.

 2015ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற மலாலாவின் திட்டத்தை நிச்சயம் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். மலாலாவின் பிறந்த தினமான டிசம்பர் 12-ஐ உலகில் அனைத்து சிறுவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய செயல் தினமாக இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டும் என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிரென் குறிப்பிட்டார். 

2 comments:

  1. ஓஹோ குடும்பமே அவங்கட பொம்மைகள‍ தானா ....???

    ReplyDelete
  2. பாலஸ்தீன் நாட்டு பச்சிளம் குழந்தைகளை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்தது . அந்த குழந்தைகளின் தந்தைமர்களுக்கு ஐ.நா என்ன பதவி கொடுக்கபோகுதாம்??? பிரிட்டனின் முன்னாள் பிரதமர் இது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?? இது தலிபான்கள் செய்யவில்லையே??

    ReplyDelete

Powered by Blogger.