பிலிப்பைன்ஸின் இயற்கையின் சீற்றம் தொடருகிறது
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை கடந்த வாரம் தாக்கிய போகா புயல் நேற்று வடக்கு பகுதி நோக்கி திரும்பியது. ஆனால் புயல் வலுவிழந்ததால் பலத்த மழையுடன் வடக்கு பகுதி தப்பியது.
இந்த நிலையில் புயல் தாக்கிய பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மைண்ட்னோவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சிறிய சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட புயல் மற்றும் நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பரிதவிக்கிறார்கள்.
போகா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பிலிப்பைன்சின் தெற்கு பகுதி இன்னும் கொஞ்சம் கூட மீளவில்லை. நியூபட்டானில் உள்ள மலை நகரமான மைண்ட்னோதான் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.
வீடுகளை இழந்த அங்குள்ள மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. குழந்தை களும், பெண்களும் உணவுக்காக பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் மீது கருணை காட்டுங்கள், தயவு செய்து தானம் அளியுங்கள், எங்களுக்கு தேவை உணவு போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை வைத்துப் பிச்சை எடுக்கிறார்கள். வாகனங்களில் செல்வோர் தங்கள் கையில் இருப்பதை கொடுத்துவிட்டு செல்கிறார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்சில் ஏற்பட்ட போகா புயலால் 548 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment