கல்முனை சாஹிராக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க கொழும்புக் கிளை மீளமைப்பு (படம்)
(அஸ்ரப் ஏ சமத்)
கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்புக் கிளை மீள புதிய நிருவாக உறுப்பினர்களுடன் சங்கம் அமைக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபர் ஏ.ஆதம்பவா பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கலாநிதி றியாஸ் ஆசிரியர் எம். ஐ.எம் அஸ்வர் ஆகியோர் இக் கூட்டத்திற்கு சமுகம் தந்திருந்தனர்.
பழையமாணவர்கள் கொழும்பில் தொழில் புரிவோர் 79 பேர் சமுகம் தந்திருந்தனர் அதில் சிரேஸ்ட பழைய மாணவர்களான முன்னாள் கல்விப் பணிப்பளாளர் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், முன்னாள் அதிபரும் சட்டத்தரணியுமான எம்.சி ஆதம்பாவா, சிரேஸ்ட சட்டத்தரணி எம் நஜீப் பாணந்துறை ஜீலான் வித்தியாலய அதிபர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, டாக்டர் தாசீம் அகமத், முஸ்லீம் கல்விமாநாட்டின் செயலாளர் எம். வை.பாவா டொக்டர் சனுஸ் ஊடகவியலாளர் றிப்தி அலி மற்றும் ஐ. ரீ பொறியியலாளர் முபீன் மற்றும் தௌபீக் ஊடகவியாலாளர் ஜெஸ்மின் கணக்காளர் அண்வர் முஸ்தபா ஆகியோகளும் கல்லூரி பற்றியும் அதன் குறைபாடுகள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தின் நோக்கம் பற்றியும் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
2011கல்வி ஆண்டில் இருந்து 1989ஆம் கல்வி ஆணடில் இருந்து ஒவ்வொரு மாணவர் வீதம் 25பேர் நிருவாக சபை உறுப்பினர்களாகவும் மற்றும் சிரேஸ்ட மாணவர்களான மருதூர் மஜீத், ஏ.ஆர்.எம் ஜிப்றி . தாசீம் அகமத், எம்.சி ஆதம்பவாவ, சட்டத்தரணி நஜீப் ஆகியோர் இச் சங்கத்தின் போசகர்களாக சேர்த்துக் கொள்ளபடடனர்;
Post a Comment