Header Ads



சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஒபாமா அங்கீகாரம் வழங்கினார்


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 20 மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதையொட்டி ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவின் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இருந்தும் போராட்டம் ஓயவில்லை. 

போராட்டக்காரர்களுடன் புரட்சி படையும் சேர்ந்து ராணுவத்தை எதிர்த்து போரிட்டு வருகிறது. இருந்தும், அதிபர் பஷர் அல் - ஆசாத் பணியவில்லை. பதவி விலக மறுத்து வருகிறார். இந்த நிலையில், தங்கள் உரிமைக்காக போராடும் மக்களுக்கும், புரட்சி படைக்கும் அமெரிக்கா அங்கீகாரம் அளித்துள்ளது. 

இந்த தகவலை அதிபர் ஒபாமா நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,,

பொதுமக்கள் பெண்கள் மற்றும் மைனாரிட்டி மக்களின் உரிமைகளுக்காகவும், அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கவும் புரட்சியாளர்கள் ஒரு அணி அமைத்து போராடி வருகின்றனர். அவர்களை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது என்றார். 

மொராக்கோ தலைநகர் மராக்காவில் சிரியா பிரச்சினை குறித்து ஆலோசிக்க 70 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிப்பின் மூலம் போராட்டக்காரர்களுக்கு ஆயுதம் வழங்க இருப்பதாக கருதக்கூடாது. அரசியல் ரீதியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மக்களை கொன்று குவிக்கும் ராணுவம் மற்றும் அதிபர் பஷர் அல்-ஆசாத் ஆதரவாளர்களையும் அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்கு முன்பே, சிரியா போராட்டக்காரர்களுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், துருக்கி மற்றும் வளைகுடா நாடுகள் அங்கீகாரம் அளித்து விட்டன. 

1 comment:

Powered by Blogger.