Header Ads



ஜெருசலத்தை இரண்டாக பிரிக்க முடியாது - இஸ்ரேல் பிரதமர் கொக்கரிப்பு


இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலத்தை இரண்டாக பிரிக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் கூறினார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் காசா மற்றும் மேற்குகரை பகுதிகளை உள்ளடக்கி பாலஸ்தீனத்திற்கு ஐ.நா.அங்கீகாரம் வழங்கியது. எனினும் தலைநகர் ஜெருசலம் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ, இஸ்ரேலின் தலைநகராகத்தான் இருக்க வேண்டும் எனவும் கிழக்கு ‌‌ஜெருசலத்தில் 1500 குடியிருப்புகளை கட்ட ஒப்புதல் வழங்கினார். இதற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஜெருசலத்தை கிழக்கு ஜெருசலம் பகுதியில் குடியிருப்புகளை கட்டக்கூடாது என வலியுறுத்தினர்.இது குறித்து பிரதமர் நெட்டன்யாகூ கூறுகையில் ஜெருசலத்தை இரண்டாக பிரிக்கும் திட்டமில்லை. இஸ்ரேலின் ஒருங்கிணைந்த பகுதியாக ‌ஜெருசலம் இருக்கும். கிழக்கு ஜெருசலத்தில் திட்டமிட்டபடி 1500 குடியிருப்புகளை இஸ்ரேல் அரசு கட்டும் .இவ்வாறு அவர் கூறினார். பிரதமரின் இந்த பிடிவாதத்தை சர்வதேச சமூகம் விமர்சித்துள்ளது.

No comments

Powered by Blogger.