Header Ads



விண்வெளிக்கு சுற்றுலா - சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது



பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அமெரிக்காவின் ரிச்சர்ட் பிரான்சன் விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. அதற்கான கட்டணம் தலா இந்திய ரூ.1 கோடியே 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஏராளமானவர்கள் முன்பதிவு செய்தனர்.

இதையடுத்து புதிய விசேஷ விண்கலம் தயாரிக்கப்பட்டது. அதிவேக சக்தி கொண்ட கலப்பின எந்திரத்தில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலத்தில் 2 விமானிகள் மற்றும் 6 பயணிகள் என 8 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மொஜாவ் வின்வெளி மையத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜார்ஜ் ஒயிட்சைட்ஸ் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.