அல்குர்ஆன் மனன போட்டியில் முதலிடம் - வரவேற்பதில் மேர்வின் சில்வா பங்கேற்பு (படம்)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடம்பெற்ற இலங்கை மாணவன் ரிப்தி முஹம்மது ரிஸ்கான் இன்று புதன்கிழமை காலை சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை வந்தபோது விமான நிலையத்திலும் அவர் கல்வி கற்ற (கொழும்பு பெரிய பள்ளிவாசல்) மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியிலும் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது
சவூதி அரேபியாவில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 83 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை மாணவன் முதலாமிடத்தை பெற்றுக் கொடுத்து இலங்கைக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார்.
சவுதியிலிருந்து இன்று புதன்கிழமை காலை இலங்கை வந்த இவரை விமான நிலையத்தில் புத்சாசன மற்றும் மதவிவகார பதிலமைச்சர் எம்.ஏ.கே.டி.எஸ்;.குணவர்த்தன மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் றபீக் இஸ்மாயில், உதவி பணிப்பாளர் மௌலவி நூருல்; அமீன், மேல்மாகாண ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் நகீப் மௌலானா, முஸ்லிம் விவகாரகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஹஸன் மௌலானா உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.
Yaa Allah make such Haafizh in all over the world.I humbly request All Muslim parents to encourage your children also for Haafizh.
ReplyDeleteமாஷா அல்லாஹ் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் இவ்விளம் ஹாபிள் அவர்களுக்கு . இத்திஹாதுல் மதாரிஸ் , அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா , இஸ்லாமிய அமைப்புக்கள் ஓன்று பட்டு இவரை பாராட்டி ஏனைய மாணவர்களையும் ஊக்கப்படுத்த முன் வரவேண்டும்.
ReplyDeleteMasha Allah. It gives all Sri Lankans great pleasure.
ReplyDeleteCongratulations Rizwan and his parents.
May Almighty Allah bless him for his bright future.
Also my appreciation for the Respected Ulamaas of the Arabic College for their remarkable devotion and guidence for the succees of Rizwan. Jazakallahu Khairan.
Addalaichenai M. Siraj Ahamed from Palestine.
Alhamdulillah very very very good, excellent offer and favor of Almighty Allah
ReplyDelete"Masha Allah " all srilankan Muslims and srilankans proud about you. in shaa ALLAH , Allah will reward you and may give you all sucsses in your future affords "Ameen"
ReplyDelete