கிளிநொச்சி முஸ்லிம்களுக்கு உதவுவது எமது தார்மீக பொறுப்பு - சந்திரகுமார் எம்.பி.
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தி அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பது எமது தார்மீகப் பொறுப்பு என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாச்சிக்குடாவில் 15-12-2012 நடைபெற்ற சமூகசேவையாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற முஸ்லிம் மக்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு நாம் இன்முகத்துடன் அழைப்பு விடுக்கின்றோம். இடம்பெயர்ந்த காலப்பகுதியில் அவர்கள்; சந்தித்த இழப்புக்களை ஈடுசெய்யக்கூடிய வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அதனடிப்படையில் நாச்சிக்குடா பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள 360 குடும்பங்களைச்சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு எம்மால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் முதன்மையாகவுள்ள கல்வி மேம்பாட்டுக் கொள்கைக்கமைவாக நாச்சிக்குடா முஸ்லிம் தமிழ் வித்தியாலயத்தின் அடிப்படைத்தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் மேலும் குறிப்பிட்டார.;
நாச்சிக்குடா மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகசேவையாளர்களை மதிப்பளித்தல், மற்றும் முஸ்லிம் அறநெறி பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதியில் நியமனம் பெற்ற சமாதான நீதவான்களுக்கான நியமனக்கடிதங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மௌலவி சாகிம் மற்றும் பூகரி பிரதேச செயலர் வசந்தகுமார் கிராமசேவையாளர் நகுலேஸ்வரன் கிராம அபிவிருத்திசங்கத்தினர் சமாதான நீதவான்கள் சமூகசேவையாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment