அரசாங்கத்தை கவிழ்க்க பொதுமக்கள அனுமதிக்கமாட்டார்கள் - ஜனாதிபதி மஹிந்த நம்பிக்கை
நிறைவேற்றதிகாரம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாருக்கும் குற்றம்சுமத்தும் வகையில் தனது சுயகௌரவத்தை பாதுகாத்து செயற்படுவதற்கு நீதிமன்றம் முனைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மினுவாங்கொட புதிய நகர மண்டபத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் உள்ள கௌரவம் அற்றுப்போகுமாயின் நாட்டை நிர்வகிப்பதில் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, நீதிமன்ற கட்டமைப்பை இரண்டாக்கி அரசியல் மயப்படுத்தும் முயற்றசிகளும் நாட்டில் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
இந்தநிலையில், தாம் கட்டியெழுப்பிய அரசாங்கத்தை பொதுமக்கள் ஒருபோதும் கவிழ்ப்பதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment