Header Ads



புத்தளத்தில் மீன் மழை - அநுராதபுரத்தில் மஞ்சள் மழை - ஹபரணயில் சிவப்பு மழை


புத்தளம் - ஆசிரிகம பகுதியில் இன்று 27-12-2012 பிற்பகல் மழை பெய்ததோடு மழையுடன் சேர்த்து மீன்கள் விழுந்துள்ளது. 30 நிமிடங்கள் மழை பெய்த நிலையில் இடையில் மீன் விழுந்துள்ளது. 

அநுராதபுரம், திரிப்பனே, 50 ஏக்கர் அத்துன்கம, ஹொரவபொத்தான, கெக்கிராவ, லபுனொருவ மற்றும் லபுனோருவ ஆகிய பிரதேசங்களில் இன்று மஞ்சள் மழை பெய்துள்ளது.  இந்த மஞ்சள் மழை சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த மழை நீடித்துள்ளது. 

ஹட்டன் - குடாஓயா பகுதியில் இன்று மஞ்சள் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணிநேரம் இவ்வாறு மஞ்சள் மழை பெய்துள்ளது.

இதேவேளை, ஹபரண, பலுகஸ்வௌ பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.