ஊடகவியலாளர் பளுளுல்லாஹ்வின் ஜனாஸா நல்லடக்கம் (படங்கள்)
மூத்த ஊடகவியலாளரும் இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் நிலைய முகாமையாளருமான ALM.பளுளுல்லாஹ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் 30-11-2012 மாலை ஜாமியுள்ளாபிரீன் ஜும்மாஹ் பள்ளிவாயிலில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அப்பள்ளிவாயில் மையவாடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஊரின் முக்கியஸ்த்தர்கள்,ஊடகவியலாளர்கள்,காத்தான்குடி பஸ் நிலைய ஊழியர்கள்,அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ஜனாஸா நல்லடக்கத்தையடுத்து காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் பிரச்சாரகர் மௌலவி BM.அஸ்பர் பலாஹி மையவாடியில் குழுமியிருந்த பொதுமக்களுக்கு உருக்கமான உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
Post a Comment