Header Ads



இனவாதிகளுக்கு களமமைக்கும் நம்மவர்கள்...!


(M.H. ABDULLAH. (AZHARY))

இலங்கை பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாடு. மத நல்லினத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் சிறந்த உதாரணமாக வரலாறு நெடுகிலும் இருந்து வருவதை நாம் அவதானிக்க முடியும். 

எனினும் முஸ்லீம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள், முரண்பாடுகள் அண்மையில் சில இனவாதிகளின் வகுப்பு வாத குரல்கள் ஓங்கி ஒலிப்பதற்கு காரணமாக அமைந்தமையை  யாராலும் மறுக்க முடியாது.

சிங்களவர்கள் சுயமாக சிந்திக்க துவங்கி விட்டார்களா அல்லது தூண்டப்பட்டார்களா என்ற வினாவிற்கு விடையளிக்க ஆழமான சிந்தனை காலாவதியான மூளைக்குத்தான் தேவைப்படும் என நினைக்கிறேன்.

இயக்க வெறி உச்சகட்டத்தை அடைந்ததன் விளைவு மாற்று இயக்க சகோதர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது, இறை இல்லங்களை தீயிட்டுக் கொளுத்துகின்ற அசிங்கமான சம்பவங்கள், பின்னர் தீர்வு தேடி பொலிஸ், நீதிமன்றங்கள்  என அலைவது இஸ்லாத்தைப் பற்றிய தவறான பார்வையை  மாற்று மதத்தவர்களிடம் விதைப்பதற்க்கு காரணமாக முஸ்லிம்களே காரணமாக அமைந்து விடுகின்றனர்.

குறிப்பாக (சில) போலி தாயிகளின் அவர்களின் நாவு  நீண்டதனால் பாரதூரமான விபரீதங்களை முஸ்லீம் சமூகம் சந்தித்த சம்பவங்கள் பலவுண்டு. சந்திக்கு வராத சில ஊமைச் சம்பவங்கள் உட்பட. 
     
இதன் விளைவாக முஸ்லீம்கள் "பயங்கரவாதிகள்" என்ற முத்திரை குத்தப்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் சிங்கள தேசத்திற்க்கும், தேசிய ஒருமைப்பாடுக்கும் பாரதூரமான பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் சிங்கள இனத்தவர்களிடம் தோன்றியிருப்பதன் வெளிப்பாடுதான் அண்மையில் தம்புள்ளை முதல் பதுளை வரை நடந்த நிகழ்வுகள்.       

கலாகாலமாக முஸ்லீம்கள்  அனுபவித்து வந்த அடிப்படை உரிமைகளை இழக்கும் காலம் அண்மித்து விட்டதாக எண்ணத் தோன்றுகிறது.

சுதந்திரமாக மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் மதக் கிரியைகளை செயல்படுத்துவதற்கும் எம்மவர்களே தடையாக இருக்கும் போது இனவாதிகளின் அராஜகங்களுக்கு எதிராக எப்படி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்? 

நமது முஸ்லீம் சமுகத்தின் மத்தியில் புரையோடிப்போயுள்ள  பிரிவுகள், முரண்பாடுகள் அதன் உற் கட்டமைப்பின் உறவுகளில் பாரிய இடை வெளியை ஏற்படுத்தியுள்ளன.

இக்கோளாறு ஆன்மீக வறுமையின் அங்கீகாரத்துடன் அதன் இருப்பை இஸ்திரப்படுத்தி இருக்கும் நிலையில் மாற்று மதத் தரப்பினரால் அவ்வப்போது வெளியாகும் துவேஷ உணர்வலைகளுக்கு ஒரு போதும் எதிர் நீச்சல் போட முடியாது.

எனவே இலங்கை முஸ்லீம்களின் சமயம் சார்ந்த, சாராத  நலன்களுக்கான உத்தரவாதம் அவர்களின் ஒற்றுமியிலேயே தங்கி இருக்கின்றது என்ற யதார்த்தம் ஒவ்வொரு முஸ்லிமினாலும் புரிந்துகொள்ளப் பட வேண்டும்.     

அல்லாஹ் தனது திரு மறையில்,

உறுதியாக இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தான் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விடும்புகிறான். (61-4). 

எந்த சமூகம் அல்லாஹ் விரும்பிய பாணியில் தமது பிரச்சனைகளுக்கான  தீர்வுகளைத் தேடுகிறதோ அவர்களை அல்லாஹ் விரும்புகிறான். அவர்களின் விருப்புக்களையும் நிறை வேற்றுகின்றான்.  
  

No comments

Powered by Blogger.