சட்டவிரோத இஸ்ரேல் இவ்வருடத்தில 900 குழந்தைகளை கைதுசெய்தது
(தூது)
இஸ்ரேல் ராணுவம் இவ்வாண்டு 900 ஃபலஸ்தீன் சிறார்களை கைது செய்துள்ளதாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகளின் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிறார்கள் 700 பேர் ஆவர். ஃபலஸ்தீன் சிறார்களை இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்வதாக அறிக்கை கூறுகிறது. கையும், காலும் கட்டி பல மணிநேரம் சிறையில் விசாரிக்கப்படுவது வழக்கமாகும். குற்றங்களை ஒப்புக்கொள்வதற்காக இஸ்ரேல் ராணுவம் கொடூரமாக சித்திரவதைச் செய்கிறது. சில சிறார்களை அதிக நேரம் மழையில் நிறுத்துவார்கள்.
விடுதலையாகும் பெரும்பாலான குழந்தைகளுக்கு மனநோய் பீடிக்கப்பட்டுள்ளது. சிறையில் பாதிக்கப்படும் சிறார்களுக்கு மருத்துவ சிகிட்சை அளிப்பதையும் இஸ்ரேல் ராணுவம் அனுமதிப்பதில்லை.
பல குழந்தைகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதும் மறுக்கப்படுகிறது. பல சிறார்களும் சக கைதிகளால் பாலியல் ரீதியாக சித்திரவதைச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.
குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டமும், சர்வதேச சட்டங்களையும் மீறித்தான் இஸ்ரேல் இத்தகைய காரியங்களை புரிவதாக ஃபலஸ்தீன் அமைச்சர் ஈஸா கராகியா தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் புகார் அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு அளிக்கும் உரிமைகளும், பாதுகாப்பும் ஃபலஸ்தீன் குழந்தைகளுக்கு வழங்க முடியாது என்று அண்மையில் இஸ்ரேல் திமிராக கூறியிருந்தது.
ellam walla allah aniyayakararhalai parthuk kondirukinnran.eai isrel islathitku ethirana wanmurai unakku nirantharamanathalla.
ReplyDelete