பிரதி அதிபர் தாக்கி 9 மாணவர்கள் காயம்
பாடசாலையின் பிரதி அதிபரினால் தாக்கப்பட்ட 8 மாணவிகளும், ஒரு மாணவனும் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிமடை – கம்பெத்தை மஹா வித்தியாலயத்தின் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையின் மூன்றாம் தவணை விடுமுறை நேற்று 07-12-2012 வழங்கப்பட்ட நிலையில், அதற்காக ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள சென்றவர்கள் மீதே அவர் இவ்வாறு தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பண்டாரவளை காவற்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
Post a Comment