Header Ads



அரசாங்கத்திற்கு இரண்டாயிரத்து 800 மில்லியன் ரூபா இழப்பு


(sfm) வரி செலுத்தாமை காரணமாக, அரசாங்கத்திற்கு இரண்டாயிரத்து 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான விரிவான திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மல்லிகா சமரசேகர குறிப்பிட்டார்.

வரி செலுத்தாதவர்களுக்கு எதிரான 904 வழக்குகள் இதுவரை தொடரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றார்.

பெரும்பாலானோர் தாமே மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கான வரியை செலுத்தும் முறையே நாட்டில் காணப்படுகின்றதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.