Header Ads



ஆண்டுகள் 8 ஓடிமறைந்தாலும் சுனாமியின் பேரவலத்திலிருந்து மீளாத மக்கள்..!


(எஸ்.எல். மன்சூர் - கல்விமாணி)

நேற்றுப்போல் இருக்கிறது. எட்டாண்டுகள் ஓடிவிட்டன. இயற்கையின் சீற்றத்தினை யாரால்தான் தடுக்க முடியும். ஆம் அன்று ஞாயிற்றுக்கிழமை. காலைவேளையில் அமைதியாக இருந்த கிழக்குக் கடற்கரையோரம் 7.45மணிக்குப்பின்னர் அமைதியான அந்தக் கடல் சற்று பின்னே போகிறது. மக்கள் கடல் வற்றுகிறதா என்று ஆச்சரியத்துடன், வேடிக்கை விநோதத்துடம் பார்த்துக் கொண்டு நிற்கின்றபோது பெரியலை ஒன்று வந்து அனைவரையும் திக்குமுக்காடச் செய்தது. அவ்வாறு வந்து சென்ற அந்த அலை முன்னெச்சரிக்கையாகவே வந்தது என்பது பின்னர்தான் தெரியவந்தது. அதன் பின்பு கடலிலுக்குள் இரையாகப் போகும் அந்தமக்களுக்கு எதுவுமே தெரிய நியாயமில்லை. மீண்டும் கடல் உள்ளே வெகுதூரம் செல்கிறது. மீண்டும் சிலர் தன் கமராக்களில் படமெடுக்க, பலர் மூக்கின்மேல் விரல்வைத்து பார்த்துக் கொண்டிருக்கின்ற அந்தக்கனப்பொழுதில் அமைதியாக இருந்த கடல் தீடீரெனச் சீறிப்பாய்ந்தபோதுதான் ஆச்சரியம் ஏற்பட்டது.

ஏனெனில் உலகமே கடலுக்குள் சங்கமிக்கப்போகின்றதோ என்ற மரணப் பயத்துடன்கூடிய அதிபயங்கரமானமுறையில் சீறியெழும்பிய அந்த பேரலைகளான சுனாமியலைகள் சுமார் ஐம்பது அடி உயரத்தி;ற்கும் மேலாக உயர்ந்தபோதுதான் படமெடுத்தவர்களும், ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றவர்களும், கடற்கரையோரம் வலைகொண்டு மீன்பிடித்துக் கொண்டுநின்றவர்களும், கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலுள்ள வீடுகளில் இருந்தவர்களும் என்ன நடக்கின்றது என்று தெரியாமலே கடலுடன் சங்கமித்து தன்னுயிரையும், உடமைகளையும் கபளீகரம் செய்த அந்தநாளை நேரில் கண்டவர்களும், அதனால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பை உணர்;ந்தவர்களும், சொந்த பந்தங்களை பலிகொடுத்தவர்களும் அந்நிகழ்;வினை மறக்கலாமா? மறக்கத்தான் முடியுமா? சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் மாறாவில்லை. 

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம்நாள் உள்ளுர் நேரம் காலை 6.58க்கு இந்தோனேசியாவிலுள்ள சுமாத்திராத்தீவுக்கு வடக்கே 160கிமீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 33கிலோமீற்றர் ஆழத்தில் 9.1றிட்சர் அளவில் ஏற்பட்ட புவி நடுகத்தினால் தோற்றுவிக்கப்பட்ட கடல் கொந்தளிப்பானது சுமார் 14நாடுகளில் 2லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரையும் குடித்து பலகோடான கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் உடமைகளையும் சில கணப்பொழுதில் அடித்து நொறுக்கி ஏப்பம்விட்ட கடலை இன்றும் காற்றுவாங்கவும், இரசிக்கவும், நிம்மதிக்காவும் கடற்கரை செல்கின்றோம். இருந்தாலும் சுனாமிக்குப் பிறகு நமது கடற்கரைப் பயணங்கள் உள்ளத்தில் சிறிய அச்சத்தைத் தோற்றுவித்துள்ளமை யாராலும் மறுக்கமுடியாது. அதேநேரம் அண்மைக் காலமாக நமது நாட்டின் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் தொடராக இடம்பெற்றுவரும் பூமி அதிர்வானது டிசம்பர் மாத்தின் சுனாமியை நினைவுபடுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. 

இவ்வாறு 2.9 றிச்டர் அளவுள்ளதாக அம்பாரையில் ஏற்பட்டுள்ள நில அதிர்வுகள் தொடர்;ச்சியாக உணரப்பட்டாலும், கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக சுமார் 28 தடவைகள் இவ்வாறு அதிர்வேற்பட்டமை குறித்து இலங்கையின் புவியியல் மற்றும் சுரங்க அகழ்வு மையம் மாதுருஓயா பிரதேசத்தை நிலஅதிர்வுக்கான வலயமாக இனங்கண்டுள்ளது. அம்பாரையின் வடினாகல, தேவாலஹி;ந்த, தமன போன்ற இடங்களில் அடிக்கடி இவ்வதிர்வு ஏற்படுவதாகவும், கூறப்பட்டதையடுத்து 10இடங்களில் புவியதிரிவினை அளவிடும் கருவிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வுப் மையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கையை அண்மித்தவாறு புதியதகடொன்று உருவாகி வருவதாகவும் புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்க அண்மையி;ல் தெரிவித்ததற்கமைவாக பார்க்கின்றபோது இலங்கையும் புவிநடுக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. 

புவியானது 12 தட்டுக்களை உடையது என்றும் இந்திய – அவுஸ்திரேலியா புவித்தட்டே இலங்கையின் அமைவிடமாகவும் உள்ளநிலையில் இலங்கைக்கு தெற்காக சிறிய வெடிப்பு ஏற்பட்டு இது வளர்ச்சியடைந்து வருவதாகவும், டோஹேர்டி ஆய்வகத்தின் அமெரிக்க விஞ்ஞானியான ஜேம்ஸ் கோச்ரா கண்டுபிடித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதன்படி பார்க்கின்றபோது இந்திய அவுஸ்திரேலிய தகடு பிரிந்து புதி;ய தகடு ஒன்று இலங்கையில் உருவாகி வருகின்றது. எனும் இந்த கோட்பாட்டின்படி இலங்கையிலும் புவி அதிர்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன என்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருந்தது. அந்த சாத்தியங்கள் இப்போது உருவாக்கம் பெற்றுள்ளதுபோல் இன்று அம்பாரை மாவட்டத்தில் சில இடங்களில் தொடராக நில அதிர்வுகள் உணரப்படுகின்றன. கடந்தாண்டுகளிலும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அப்பப்போ குறைந்தளவிலான அதிர்வுகள் காணப்பட்டுவந்தாலும் இலங்கையின் எதிர்காலம் குறித்து உண்மையான ஆய்வுகள் நடாத்தப்பட்டு அதற்கு முன்னேற்பாடான வாழ்வுக்கு எம்மை நாம் தயார்படுத்துதல் அவசியமாகும்.

தற்போது இலங்மைகயின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. காரணம் கடந்த சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு குறிப்பாக மழைகாலங்களில் அசாதாரண சூழலுக்கான முஸ்தீபுகள் நடைபெறுவதுபோலவே காணப்படுகின்றமையானது மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாகவே மக்களால் பார்க்கப்படுகி;ன்றது. மட்டக்களப்பிலுள்ள ஆற்றில் ஒருவகை கடல் பாம்புபோன்ற பிராணி வெளியாவதும், கடலில் அதிகளவு மீன்கள் பிடிக்கப்படுவதும், கடல் கரையின் மோதுகையால் ஏற்படுகின்ற கடலரிப்புக்கள் போன்ற சாதாரண சூழலுக்கு அப்பாற்பட்டதான செயற்பாடுகள் ஏதோ ஒன்றுக்கான அடிப்படையாக அமையலாம் என்பது சாதாரண மக்களின் கருத்துக்கள். 

அதேவேளை உலகம் அழிவுக்கான பயனத்தை நோக்கிச் செல்கின்றதா என்கிற கேள்விகளும் அண்மையக் காலங்களில் உலகநாடுகள் பலவற்றில் விஞ்ஞானிகளை கேள்விக்குள்ளாக்கியுள்ள வினாக்கள். மாயன் கலண்டர், விண்கற்களின் விரைவு, பணிப்பாறைகள் உருகும் நிலை, சூரியன் உதிக்கும் திசைகள், கிரகங்களில் ஒருமித்த பார்வை போன்றனவும் இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளை சாதாரண மக்களின் வாழ்வில் சமயம் சார்ந்த கருத்துக்களும், விஞ்ஞானரீதியான கருத்துக்களும் ஒருபடிமேலே சென்று அறிவியல் ரீதியான யதார்த்தத்தையும் கடந்து சமயக்கோட்பாடுகளின் அடிப்படையில் மக்கள் இயற்கையின் விளைவுகள் மனிதர்களின் செயற்பாடுகளைக் கொண்டே அமைகின்றன என்கிற உண்மைகளையும் உணர்ந்துள்ளார்கள் என்பதுதான் யதார்த்தம்.

அனர்த்தமொன்று மீண்டும் ஏற்படும் பட்சத்தில்...

இலங்கையின் கரையோரங்களில் பாதிப்பினை ஏற்படுத்திய 2004ஆம் ஆண்டின் சுனாமிபேரலையானது மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடலோடு ஒட்டி உறவாடிய மனிதர்கள் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்து மீளவும் முடியாது காணப்படுகின்றனர். சுனாமிக்குப் பின்னர் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்புக்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஒருசுனாமி ஏற்பட்டாலும் அதிலிருந்து அதிகளவான பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்கரையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதுடன், கடலையும், அதன் அண்டியபகுதிகளையும் மக்கள் பாதுகாக்கும் தன்மையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இயற்கைக்கு முக்கியத்துவம்கொடுக்கப்பட்டு மக்களும் இயற்கைக்கு உதவிடுகின்ற ஒரு நிலைப்பாட்டை எம்முள்ளே, எமது சமுதாயத்தின் முன்னே கடந்த சுனாமி அனர்த்தமானது பாடம் புகட்டியுள்ளதையும் நாம் இலகுவில் மறந்திடலாகாது என்பதும் முக்கியமாகும். 

அதேவேளை இயற்கையின் சீற்றத்தால் உந்தப்பட்டு, இருக்க இடமின்றி, உணவின்றி, தொழிலின்றத்; தவித்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வீடுகளும், தொழிலுக்கான கொடுப்பனவுகளும், ஏனைய இன்னும்பல உதவிகளும் வழங்கப்பட்டிருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாரை மாவட்டத்திலுள்ள பல கரையோரப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்களின் வாழ்வியல் துண்பங்கள் இன்று கேள்வி;க்குறியாகவே உள்ளது. ஏனெனில் உண்மையாக பாதிக்கப்பட்டவாறு நஷ்;டஈடுகள் வழங்கப்படவில்லை என்பதும் அந்த மக்கள் கூறுகின்ற கவலையான விடயமாகும். தற்பொழுது மழை சோவெனப் பொழிந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

சுனாமியால் பாதிக்கபட்ட மக்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் பல சதுப்புநிலங்களை செப்பனிட்டே கட்டப்பட்டுள்ளன. அந்த இடம் ஏலவே நீர் நிறைந்து நின்ற பிரதேசங்கள். மாரிகாலங்களில் வெள்ளம் ஏற்படுவதும், அவைகளால் இம்மக்கள் பாதிக்கப்படும் தொடர்கதையாக இருக்கின்ற ஒரு நிலைமையும் காணப்படுகின்றது. வெள்ளம்; ஏற்படுகின்றபோது உடனடியாக நீரை வெளியேற்றுகின்ற சரியான திட்டமிடல்கள் இன்மையால் சிறிய மழைபெய்தாலும் வெள்ளம் ஏற்படுகின்ற ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்து தவிர்ப்பதற்கான புதிய வழிகாட்டல்களை ஏற்படுத்தப்படுதலின் அவசியம் இன்று நேற்றல்ல கடந்த பலவருடங்களாகவே கூறப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். இருந்தாலும் நாட்டின் அனைத்துப்பாகங்களிலும் குறிப்பாக  கிழக்கு மாகாணத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த பாதைகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் செப்பனிப்பட்டு புதுவடிவம் பெற்றுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும். 

அதேவேளை இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கின்ற பலதரப்பட்ட மனித செயற்பாடுகள் காரணமாக இயற்கை மனிதர்களை நிந்திக்கின்றதா என்கிற கேள்விகளும் எழுகின்றன. கடற்கரையோரங்களிலுள்ள தாவரங்கள் அழிப்பு, கடற்கரை மணல் அகழ்தல், கட்டுமாணவேலைத் திட்டங்களை கடற்கரையில் மேற்கொள்ளல், முருகை கற்பாறைகள் உடைப்பு போன்ற மனித நடத்தைகளும் இயற்கைக்கு எதிரான விளைவுகளாகவே பார்க்கப்படுகின்றன. உண்மையான மனிதாபிமானம் இயற்கைக்கும் மனிதர்கள் வழங்கவேண்டும். இன்று இயற்கையான மலைகள் உடைக்கப்படுகின்றமை, மேலான அபிவிருத்தித் திட்டங்கள் என்கிற பேரில் ஏற்படுள்ள இடம்பெயர்வுகள் பூமியின் சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாகவும் சுற்றுப்புறச் சூழலியலாளர்கள் பூமிக்கான அபாயத்தை முன்னறிவிப்புச் செய்கின்றனர். இவ்வாறு இயற்கை சதிசெய்ய ஆரம்பித்தால் அதனை மனித சக்தியால் கட்டுப்படுத்தவே முடியாது. இதனை ஒவ்வொரு மனிதர்களும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்வதும் சிறப்பானதாகும்.

இன்று இயற்கை அனர்த்தம் சம்பந்தமான கல்வியை வழங்கும் பாடங்கள் பாடசாலையின் கலைத்திட்டங்களில் உள்வாங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் எதிர்காலத்தில் சுனாமிபோன்ற இயற்கை அனர்த்தங்கள், இயற்கையாக ஏற்படும் நிகழ்வுகள், திடீரென ஏற்படுகின்ற விபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஆபத்தை அல்லது அழிவைக் குறைத்துக் கொள்ளவும் வேண்டிய பயிற்சிகள் இன்று பாடசாலைகள் தோறும் ஏற்படுத்தப்பட்டு அதற்கான பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற ஒருநிலை இன்று காணப்படுகின்றது. மீண்டும் ஒரு பாரிய அழிவுகள் ஏற்படாதிருக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தொடக்கம் அரசு மட்டத்தில் வரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் எண்ணிலடங்காதவை. இருந்தாலும் மக்களின் தேவைகளும், செயற்பாடுகளும் இயற்கைக்கு விரோதமான செயற்பாடுகளில்தான் அதிக ஆர்வத்தை ஊட்டுகின்றன. இதனை மனிதர்கள் தவிர்த்து எதிர்கால சந்ததிகளுக்காவும் இயற்கைக்கு குந்தகம் விளைவிக்காத மக்களாக எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதுடன், ஆழிப்பேரலையின் தாக்கத்தினால் சொந்தபந்தங்களை இழந்தவர்களின் குடும்பங்கள் இன்றைய நாளில் நினைவுகூறும் அந்த நாளின் ஞாபகத்தில் நாமும் பங்குபற்றி அவர்களுக்காக இறைவனிடம் பிரார்;;த்திப்போம். அவர்களின் ஆத்மா சாந்திக்காக இரண்டு நிமிடங்களாவது நினைவிற்கொள்வோமாக.

கடந்த காலங்களில் உலகில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்கள் பற்றிய பார்வை

1703 ஜனவரியில்; ஜப்பான் நாட்டில் 9 ரிச்;ட்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுனாமி ஏற்பட்டு 1லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். 
1730 ஜூலை சிலி நாட்டில் 8.7புள்ளி கொண்ட பூகம்பத்தாhல் 3000பேர் பலியாகினர்.

1755. நவம்பரில் போர்த்துக்கள் நாட்டில் 8.7 ரிச்ட்டர்; அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால்60ஆயிரம் மக்கள் பலியாகினர்.

1868 ஆகஸ்ட் சிலிநாட்டில் 9 ரிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டதால் ஏற்பட்ட பேரலை காரணமாக தென் அமெரிக்காவைத் தாக்கி 25ஆயிரம்பேர் இறந்தனர்.

1906 ஜனவரியில் ஈகுவேடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் 8.8 ரிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக 500பேர் சிக்கி பலியாகினர்.

1946 ஏப்ரல் யுனிமாக் தீவுகளில் 8.1ரிச்ட்டர் அளவு கொண்ட நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட சுனாமியினால் அலாஸ்காதீவுகளைத் தாக்கி 165பேர் பலியாகினர்.

1960 மே மாதத்தில் தெற்கு சிலியில் ரிச்ட்டர் 9.5 அளவுகொண்ட பூகம்பத்தினால் சுனாமி பேரலை காரணமாக 1716பேர் இறந்து போயினர்.

1964 மார்ச் இல் அமெரிக்காவில் 9.5றிச்ட்டர் அளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக ஏற்பட்ட சுனாமி அலைகாரணமாக அலாஸ்காவைத் சேர்ந்தவர்கள் 131பேரும், 128பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

1976 ஆகஸ்ட்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிச்;ட்டர் அளவுகொண்ட பூகம்பத்தினால் சுமார் 5000பேர் பலியானார்கள்

2004 டிசம்பரில் இந்தியப் பெருங்கடலில்; 9 ரிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பத்தினாலும் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிபேரலைகளினால் இலங்கை, இந்தியா உள்ளிட்ட14 நாடுகளைச் சேர்ந்த 2லட்சத்து30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

2007 ஏப்ரலில் சாலமான் தீவுகளில் ஏற்பட்;ட பூகம்பத்தினால் (8.1ரிச்ட்டர்) ஏற்பட்ட சுனாமியில் சிக்குண்டு 28பேர் பலியாகினர்.

2009 செப்டம்பரில் தெற்கு பசுபிக் பகுதியில் 8றிச்ட்டர் அளவு கொண்ட பூகம்பத்தினால் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194பேர் மரணமாயினர்.

2010 ஜனவரியில் ஹெயிட்டியில் 7றிச்ட்டர் அளவுடைய பூகம்பம் காரணமா சுமார் 3இலட்சம் பேர்வரை பலியாகினர். அதேயாண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் எரிமலை காரணமாக 500பேர் வரையில் பலியாயினர்.

2011 மார்ச் ஜப்பானில் 8.9றிச்ட்டர் அளவுடைய பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இராட்சத சுனாமி அலைகள் காரணமாக ஜப்பான் நாட்டைத் தாக்கி ஆயிரக்கணக்கான மக்களும், கோடிக்கனக்கான சொத்துக்களும் பல நகரங்களும் அழிக்கப்பட்டன.

குறிப்பு : இவ்வாண்டிலும் பல இடங்களில் சுனாமி பெரியளவில் ஏற்படாதுவிட்டாலும் பல நாடுகளில் பூகம்பங்கள் பல ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அமெரிக்கா, தாய்லாந்து, சீனா போன்ற பல நாடுகளில் கனத்த மழை, வெள்ளம் மற்றும் காற்றினாலும் மக்கள் இறந்துபோனதும், நிர்க்கதியானதும் குறிப்;பிடக்கூடிய விடயங்களாகும்.




No comments

Powered by Blogger.